சஞ்சு சாம்சன் படம்: ஏபி
ஐபிஎல்

சஞ்சு சாம்சனுக்கு ரூ.24 லட்சம் அபராதம்! கூடுதலாக அபராதம் விதிக்கப்பட காரணம் என்ன?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.24 லட்சம் அபராதம்.

DIN

மெதுவாக பந்துவீசியதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 217/6 ரன்கள் எடுக்க, அடுத்து விளையாடிய ராஜஸ்தான் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன்மூலம், 58 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற குஜராத் டைட்டன்ஸ் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

கூடுதலாக அபராதம் விதிக்க காரணம் என்ன?

ஏற்கனவே, சிஎஸ்கே உடனான போட்டியில் ராஜஸ்தான் அணியின் தற்காலிக கேப்டனான ரியான் பராக்கிற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த ஐபிஎல் தொடரில் இது ராஜஸ்தான் அணிக்கு 2ஆவது முறை என்பதால் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் இரட்டிப்பாக்க விதிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்களுக்கு ரூ.6 லட்சம் அல்லது போட்டி ஊதியத்திலிருந்து 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளிப் பட்டியலில் 7ஆவது இடத்த்இல் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்துறை அதிகாரி வீட்டில் ரூ.300 கோடி சொத்து ஆவணங்கள், ரூ.2,18 கோடி பறிமுதல்!

காரில் இருந்து பாமக கொடியை அகற்றிய ராமதாஸ்! ஏன்?

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

SCROLL FOR NEXT