க்ளென் பிலிப்ஸ் ENS
ஐபிஎல்

ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய க்ளென் பிலிப்ஸ்!

குஜராத் அணி வீரர் க்ளென் பிலிப்ஸ் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார்.

DIN

குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் க்ளென் பிலிப்ஸ் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார்.

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஃபீல்டிங் செய்த க்ளென் பிலிப்ஸ் தொடைத் தசையில் ஏற்பட்ட காயத்தினால் இந்தத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.

இதுவரை க்ளென் பிலிப்ஸை பயன்படுத்தாக குஜராத் அணிக்கு இது பின்னடைவை ஏற்படுத்துமா என்பது தெரியவில்லை.

இருப்பினும் சிறந்த பேட்டர், ஃபீல்டர், சுழல்பந்துகளை வீசக்கூடிய பிலிப்ஸ் சிறந்த ஆல்-ரவுண்டர் என்பது கவனிக்கத்தக்கது.

சன்ரைசஸ் போட்டியில் 5ஆவது ஓவரில் ஃபீல்டிங்கிற்கு வந்தார் க்ளென் பிலிப்ஸ்.

பிரசித் கிருஷணா வீசிய ஓவரில் 4ஆவது பந்தில் வேகமாக ஃபீல்டிங் செய்வார். அப்போது இந்தக் காயம் ஏற்பட்டது.

கடந்த ஏப்.3ஆம் தேதி ககிசோ ரபாடா தனிப்பட்ட காரணத்தினால் அவரது சொந்த நாட்டிற்கு திரும்பினார். எப்போது திரும்பி வருவார் எனக் கூறவில்லை.

இந்த சீசனில் வெறுமனே 7 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே குஜராத் அணி வாங்கியது. அதில் 2 வீரர்கள் இல்லாமல் இருப்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT