முகப்பு
கிரிக்கெட்

எலிமினேட்டர்: தில்லி கேபிடல்ஸுக்கு 169 ரன்கள் இலக்கு! இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் எலிமினேட்டரில் தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 168 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 3 பிப்ரவரி, 2026 at 4:39 PM
- படம் | மகளிர் பிரீமியர் லீக் (எக்ஸ்)
பகிர்:

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் எலிமினேட்டரில் தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 168 ரன்கள் எடுத்துள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் வதோதராவில் நடைபெற்று வரும் எலிமினேட்டர் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட் செய்தது.

பெத் மூனி அரைசதம்; தில்லிக்கு 169 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீராங்கனை பெத் மூனி அரைசதம் விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார். அவர் 51 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும். இருப்பினும், மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணமே இருந்தது. பெத் மூனியைத் தொடர்ந்து, ஜியார்ஜியா வார்ஹம் அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்தார்.

தில்லி கேபிடல்ஸ் தரப்பில் சின்னெல்லே ஹென்றி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். நந்தனி சர்மா இரண்டு விக்கெட்டுகளையும், மின்னு மணி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தில்லி கேபிடல்ஸ் அணி விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் (பிப்ரவரி 5) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெறும் இறுதிப்போட்டியில் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

In the Women's Premier League Eliminator match against Delhi Capitals, Gujarat Giants have scored 168 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.