தில்லி திடல், ஹார்திக் பாண்டியா.  படங்கள்: எக்ஸ் / மும்பை இந்தியன்ஸ்.
ஐபிஎல்

தூசு புயல்: தில்லி - மும்பை போட்டியில் மழை குறுக்கீடா?

மும்பை இந்தியன்ஸ் - தில்லி கேபிடல்ஸ் மோதும் போட்டியில் மழை பெய்யுமா என்பது குறித்து...

DIN

தில்லி அருண் ஜெட்லி திடலில் இன்று இரவு (ஏப்.13) தில்லி கேபிடஸ் உடன் மும்பை இந்தியன்ஸ் மோதவிருக்கிறது.

புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெறும் முனைப்பில் இருக்கிறது.

முதலிடத்தில் இருக்கும் தில்லி கேபிடல்ஸ் அணி அதை தக்க வைக்க முயற்சிக்கும்.

இந்நிலையில் இந்தப் போட்டி நடைபெறும் சமயத்தில் மழை குறுக்கீடு இருக்குமா என ரசிகர்கள் கவலையடைந்து வருகிறார்கள்.

ஏனெனில், இரண்டு நாள்களுக்கு முன்பாக தில்லியில் மழைபெய்தது. நேற்று தூசு புயலினால் தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் 450-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியதும் குறிப்பிடத்தக்கது.

மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்ட விடியோவில் திடலில் பயங்கரமான காற்று வீசுவதை காண முடிகிறது.

போட்டி நடைபெறும்போது 30-33 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பநிலையும் 28-39 சதவிகிதம் ஈரப்பதமும் இருக்குமென வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதன்படி தில்லியில் போட்டி நடைபெறும்போது மழை வராது என்றே கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்: உக்ரைன் அமைச்சரவைக் கட்டடம் சேதம்

ஜிஎஸ்டியில் மாற்றம்: பொருள்களின் விலை குறித்த புகாா்கள் மீது நடவடிக்கை - சிபிஐசி

ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 2 மடங்காக உயா்வு

தில்லி, பஞ்சாப் வெள்ளப் பாதிப்பு: கேஜரிவால், அதிஷி மீது சச்தேவா சாடல்

வெற்றி பெறுமா விஜய் வியூகம்...? - காபிரியேல் தேவதாஸ்

SCROLL FOR NEXT