மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், ஸ்டாய்னிஸ்.  
ஐபிஎல்

மோதிக்கொண்ட ஆஸி. வீரர்கள்: மேக்ஸ்வெல்-டிராவிஸ் ஹெட்டுக்கு என்ன பிரச்னை?

ஆஸி. வீரர்கள் க்ளென் மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட் இருவருக்குமான சண்டை குறித்து...

DIN

நேற்றிரவு (ஏப்.12) ஹைதராபாத் திடலில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 245 ரன்களை 18.3 ஓவர்களில் 247/2 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றிப் பெற்றது.

இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் வீசிய 9ஆவது ஓவரில் 3,4-ஆவது பந்துகளில் டிராவிஸ் ஹெட் தொடர்ச்சியாக 2 சிக்ஸர்கள் அடித்தார்.

அடுத்த பந்தில் மேக்ஸ்வெல் சிறப்பாக வீசியதால் டிராவிஸ் ஹெட் பந்துவீச்சாளரிடமே அடித்துவிடுவார்.

பந்தினைப் பிடித்த மேக்ஸ்வெல் வேண்டுமென்றே டிராவிஸ் ஹெட்டினை தாண்டி கீப்பரிடம் வேகமாக பந்தினை வீசுவார்.

இதனால் கோபமடைந்த டிராவிஸ் ஹெட் மேக்ஸ்வெல்லிடம் ஏதோ பேசுவார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

9ஆவது ஓவர் முடிவில் இருவரும் பேசும்போது பஞ்சாப் கிங்ஸின் மற்றுமொரு ஆஸி. வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் மேக்ஸ்வெல்லுக்கு ஆதரவாக டிராவிஸ் ஹெட்டிடம் வந்து பேசினார்.

இது சமூக வலைதளங்களில் வைரலானது. ஆஸி. வீரர்கள் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக இப்படி நடந்துகொண்டது இந்திய ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிராவிஸ் ஹெட் 66 ரன்களில் சஹால் ஓவரில் மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT