படம் | AP
ஐபிஎல்

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் டெவான் கான்வே, அஸ்வின் இல்லை!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

DIN

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, லக்னௌ முதலில் பேட் செய்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜேமி ஓவர்டான் மற்றும் ரஷீத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். டெவான் கான்வே மற்றும் அஸ்வின் இருவரும் இன்றையப் போட்டியில் விளையாடவில்லை.

லக்னௌ அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பெறாத மிட்செல் மார்ஷ், மீண்டும் பிளேயிங் லெவனுக்குத் திரும்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT