உலகத்திலேயே இப்போதும் தோனிதான் தலைசிறந்த விக்கெட் கீப்பர் என முன்னாள் ஆஸி. கேப்டன் கிளார்க் கூறியுள்ளார்.
லக்னௌவில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே அணி த்ரில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் கேட்ச், ஸ்டம்பிங், ரன் அவுட், கேப்டன்சி (தலைமைப் பண்பு), பேட்டிங் என அசத்திய தோனிக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
ஐபிஎல் வரலாற்றில் விக்கெட் கீப்பராக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நபராக தோனி சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து மைக்கேல் கிளார்க் கூறியதாவது:
இப்போதும் தோனிதான் தலைசிறந்த கீப்பர்
தோனி களத்தில் இருந்தால் சப்தம் அதிகமாகத்தான் இருக்கும். அவரது கீப்பிக் என்னை வியப்படைய செய்யவில்லை. நான் முன்னமே சொன்னதுதான் இப்போதும் அவர்தான் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர்.
நீண்ட காலமாக தோனி தொடர்ச்சியாக இப்படி இருப்பது மிகவும் பெரிய விஷயம். இன்று அவரது தலைமைப் பண்பும் மிளிர்ந்தது.
மிடில் ஓவர்களில் சுழல்பந்து வீச்சாளர்களை பயன்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது. ஓவர்களை விரைவாக வீசி அழுத்தத்தினை எதிரணியின் மீதும் ஏற்படுத்தினார்.
இன்றைய இரவின் சிறந்த விஷயம் என்னவென்றால் தோனியின் கேப்டன்சிதான் (தலைமைப் பண்பு). சூழ்நிலையை சரியாகக் கணித்து சுழல்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தினார். இதை அவரது வாழ்நாள் முழுவதும் செய்துள்ளார். தோனியின் அனுபவமே இன்று வெற்றிக்கு உதவியது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.