இந்தியா மிகவும் ஆபத்தான அணி; ஆனால்... எம்.எஸ்.தோனி கூறுவதென்ன?
இந்திய டி20 அணி குறித்து முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி பேசியிருப்பதாவது...
முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்திய டி20 அணியை மிகவும் ஆபத்தான அணி எனக் கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் வரும் பிப்.7ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கின்றன.
டி20 உலகக் கோப்பையில் முதல்முறையாக எம்.எஸ்.தோனியின் தலைமையில் இந்திய அணிதான் கோப்பை வென்றது.
Advertisement
Advertisement
அடுத்ததாக, கடந்த 2024ஆம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையில் இரண்டாவது முறையாக இந்திய அணி கோப்பை வென்றது.
இந்தமுறையும் இந்திய அணி சூர்யகுமார் தலைமையில் டி20 உலகக் கோப்பையை வெல்லும் அளவுக்கு தயாராக இருக்கிறது.
நமது தற்போதைய இந்திய டி20 அணியை எம்.எஸ்.தோனி மிகவும் ஆபத்தான அணி எனக் கூறியுள்ளார்.
சமீபத்திய நேர்காணலில் எம்.எஸ்.தோனி பேசியிருப்பதாவது:
இந்திய அணி மிகவும் ஆபத்தான அணிகளில் ஒன்றாக இருக்கிறது. ஒரு நல்ல அணிக்கு என்ன தேவையோ அனைத்துமே இங்கு இருக்கிறது.
இந்த டி20 போட்டிக்கான வடிவத்தில் நல்ல அனுபவம் மிக்க வீரர்கள் இருக்கிறார்கள். அழுத்தமிக்க சூழ்நிலைகளிலும் அவர்கள் விளையாடியுள்ளார்கள்.
எனக்கு கவலை தருவது இந்த ஈரப்பதம் மட்டுமே. அது பல விஷயங்களையும் மாற்றிவிடுகிறது. நான் விளையாடும்போதுமே ஈரப்பதம் மிகுந்த பயத்தை உண்டாக்கும் என்பதால் டாஸில் வெல்வது முக்கியமானதாக மாறுகிறது.
தற்போதைக்கு யாரும் காயமடையக் கூடாது; ஒவ்வொருவரும் அவர்களது கடமையைச் சரியாக செய்து முடிக்க வேண்டும்.
இப்படி இருக்கையில், நான் எதுவும் சொல்லி அது தவறாகி விடக்கூடாது. ஆனால், இந்தியா மிகவும் ஆபத்தான அணி என்றார்.
Dhoni was the first Indian captain to win it back in 2007 and when asked about the chances of the Suryakumar Yadav-led current side, he said the hosts will have to be mindful of the dew factor at this time of the year.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.