முகப்பு
கிரிக்கெட்

ஹர்மன்பிரீத் கௌர் அரைசதம் விளாசல்; அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா?

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 28 ஜூன் 2026, 8:56 pm IST
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் ஹர்மன்பிரீத் கௌர் - படம் | பிசிசிஐ
பகிர்:

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்துள்ளது.

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் லார்ட்ஸ் திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

ஹர்மன்பிரீத் கௌர் அரைசதம்; அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா?

Advertisement

Advertisement

டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்தது. ஷஃபாலி வர்மா 26 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். ஸ்மிருதி மந்தனா 38 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.

இதனையடுத்து, ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நன்றாக விளையாடி ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34 ரன்களில் ரிட்டையர்டு அவுட் ஆனார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 27 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

ஆஸ்திரேலியா தரப்பில் கேப்டன் சோஃபி மோலினக்ஸ் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Batting first in the T20 World Cup match against Australia, the Indian team scored 170 runs for the loss of 4 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments