முகப்பு
ஐபிஎல்

100-ஆவது ஐபிஎல் போட்டியில் ராகுல் தெவாதியா!

ராகுல் தெவாதியா தனது 100ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறார்.

Updated On : 19 ஏப்ரல் 2025, 4:13 pm IST
ராகுல் தெவாதியா - படம்: எக்ஸ் / குஜராத் டைட்டன்ஸ்.
பகிர்:

குஜராத் டைட்டன்ஸ் வீரர் ராகுல் தெவாதியா இன்று தனது 100ஆவது ஐபிஎல் போட்டியில் தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக விளையாடுகிறார்.

ஹரியாணாவைச் சேர்ந்த ராகுல் தெவாதியா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2014ஆம் ஆண்டு அறிமுகமானார்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 2022 முதல் விளையாடி வருகிறார்.

Advertisement

Advertisement

ஆல்-ரவுண்டரான ராகுல் தெவாதியா 99 ஐபிஎல் போட்டிகளில் 1,043 ரன்கள், 32 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள், கடைசி 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள் என அடித்து போட்டியை வென்று கொடுத்துள்ளார்.

சிறந்த பினிஷராக அறியப்பட்டு வரும் ராகுல் தெவாதியா சமீபகாலங்களில் சுமாராகவே விளையாடி வருகிறார்.

குஜராத் டைட்டன்ஸ் அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத்தில் இருக்கிறது.

ராகுல் தெவாதியாவின் 100ஆவது போட்டிக்காக ஐபிஎல் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments