பிரப்சிம்ரன் சிங், க்ருணால் பாண்டியா. படம்: எக்ஸ் / ஐபிஎல்
ஐபிஎல்

பேட்டிங்கில் சொதப்பிய பஞ்சாப்: ஆர்சிபி வெற்றிபெற 158 ரன்கள் இலக்கு!

ஆர்சிபி அணி வெற்றிபெற 158 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

DIN

ஐபிஎல் 2025-இன் 37-ஆவது போட்டியில் முல்லன்பூர் திடலில் நடைபெறும் போட்டியில் ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்தப் போட்டியில் ஆர்சிபி அணி வெற்றிபெற 158 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆர்சிபி அணியில் லிவிங்ஸ்டன் நீக்கப்பட்டு, ரோமாரியோ ஷெப்பர்டு சேர்க்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் வீரர்களுக்கு நல்ல தொடக்கம் அமைந்தாலும் யாருமே அதைப் பெரிய ரன்களாக மாற்றாததால் 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 33, ஜோஷ் இங்லீஷ் 29, ஷஷாங் சிங் 31, யான்சன் 25 ரன்களும் எடுத்தார்கள்.

ஆர்சிபி அணியில் க்ருணால் பாண்டியா, சுயாஷ் சர்மா தலா 2 விக்கெட்டுகளும் ரோமாரியோ ஷெப்பர்டு 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.

ஆர்சிபி அணி வெளியூர் போட்டிகளில் வெற்றிபெறும் என்ற நோக்கில் இந்தப் போட்டியிலும் வெற்றி பெறும் என்றே கணிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

நவி முமையில் நடனப் பாரை தாக்கி சேதப்படுத்திய நவநிர்மாண் சேனை தொண்டர்கள் !

ஆடிப்பெருக்கு தீர்த்தவாரி: கொள்ளிடம் ஆற்றில் எழுந்தருளிய நடராஜர்!

யோவ் நான் கேட்டனா...? லோகேஷ் கனகராஜை கிண்டல் செய்த ரஜினி!

பாஜக கூட்டணியால் உண்மையான அதிமுக தொண்டர்கள் அதிருப்தி: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT