சாய் சுதர்சன் படம் | AP
ஐபிஎல்

சாய் சுதர்சனுக்கு முன்னாள் சிஎஸ்கே வீரர் பாராட்டு!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் பாராட்டியுள்ளார்.

DIN

குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு பாராட்டியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது.

குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். ஷுப்மன் கில் 90 ரன்களும், சாய் சுதர்சன் 52 ரன்களும் எடுத்தனர்.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான சாய் சுதர்சன் அந்த அணிக்காக தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவித்து வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 417 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

அம்பத்தி ராயுடு பாராட்டு

நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்து வரும் சாய் சுதர்சனை சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

அம்பத்தி ராயுடு (கோப்புப் படம்)

சாய் சுதர்சன் குறித்து அம்பத்தி ராயுடு பேசியதாவது: சாய் சுதர்சன் விளையாடுவதை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நவீன கால கிரிக்கெட் வளர்ந்துவிட்டபோதிலும், பாரம்பரிய ஸ்டைலில் ரன்கள் குவிக்க முடியும் என்பதை அவரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் வெளிப்படுத்தி வருகிறார். அவர் ஸ்மார்ட் கிரிக்கெட் விளையாடுகிறார். அவரது ஸ்மார்ட்டான கிரிக்கெட் அவருடைய நம்பிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

SCROLL FOR NEXT