சாய் கிஷோர், ரஷித் கான்.  படங்கள்: ஏபி, இன்ஸ்டா / சாய் கிஷோர்.
ஐபிஎல்

தமிழக வீரரிடம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்: ரஷித் கான்

தமிழக வீரரிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புவதாக பிரபல ஆப்கன் வீரர் தெரிவித்துள்ளார்.

DIN

தமிழக வீரர் சாய் கிஷோரிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்புவதாக பிரபல ஆப்கன் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2025 சீசனில் புள்ளிப் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலிடத்தில் இருக்கிறது. பேட்டிங் மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் அசத்திவருகிறது.

கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் 39 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றது.

இந்த அணியில் தமிழக வீரர் சாய் கிஷோர் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

ஃபார்மில் இல்லாமல் இருந்த ரஷித் கான் தற்போது சிறப்பாக பந்துவீச தொடங்கியுள்ளார்.

தமிழக வீரரிடம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்

இது குறித்து ரஷித் கான் கூறியதாவது:

போட்டிக்கு முன்பாக நானும் சாய் கிஷோரும் அதிகமாக பேசுவோம். நான் அவரிடம் பிட்ச்சுகளை நம்பி இருக்க வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக சரியான இடங்களில் பந்துவீச வேண்டுமெனக் கூறினேன்.

சாய் கிஷோர் பந்துவீசும் விதமும் அவரது வேறுபட்ட வகையிலான பந்துகளும் எனக்குப் பிடித்துள்ளன. நான் அவரிடம் இருந்து கற்றுக்கொள்கிறேன்.

நானும் சாய் கிஷோர் மாதிரி பந்துவீச நினைக்கிறேன். நான் என்னுடைய அனுபவத்தை அவரிடம் பகிர்கிறேன். அத்துடன் இந்தியாவில் எப்படி பந்துவீச வேண்டும் என்பதையும் நான் அவரிடம் இருந்து கற்றுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் விரைவில் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை: இந்தியா நம்பிக்கை

நாளைய மின்தடை

ஆளுநா் மாளிகை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

ரஷியாவின் தாக்குதலில்.. மூழ்கியது உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பல்!

SCROLL FOR NEXT