பாராட்டி பேச விரும்பிய சஞ்சீவ் கோயங்காவை கண்டுகொள்ளாமல் சென்ற கே.எல்.ராகுல். 
ஐபிஎல்

பாராட்டிப் பேச விரும்பிய சஞ்சீவ் கோயங்கா! கண்டுகொள்ளாமல் சென்ற கே.எல்.ராகுல்!

பாராட்டிப் பேச விரும்பிய சஞ்சீவ் கோயங்காவை கண்டுகொள்ளாமல் சென்ற கே.எல்.ராகுல்.

DIN

பாராட்டிப் பேச விரும்பிய லக்னௌ அணியின் உரிமையாளரை சஞ்சீவ் கோயங்காவை கண்டுகொள்ளாமல் சென்ற தில்லி அணி வீரர் கே.எல்.ராகுலில் விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் தில்லி கேபிட்டல்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. அதிரடியாக விளையாடிய தில்லி அணியின் கே.எல்.ராகுல் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை சிறப்பாக முடித்து வைத்தார். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல், 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 57* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார். 

போட்டி முடிந்ததும் வீரர்களுடன் கைகொடுக்கும் நிகழ்வில் பங்கேற்ற கே.எல்.ராகுல் லக்னௌ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவிடம் கை கொடுத்துவிட்டு அங்கிருந்து உடனடியாக கிளம்பினார். அவரிடம் பாராட்டி பேச வந்த சஞ்சீவ் கோயங்காவை அவர் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

அவரைத் தொடர்ந்து அவரது மகன் சஸ்வத்தும் பேச முற்பட்டார். ஆனால், கே.எல். ராகுல் விரும்பாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றார். இந்த விடியோக்கள் தற்போது சமூக வலைதளங்கள் முழுவதும் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

கடந்தாண்டு கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னௌ அணி சரியாக விளையாடவில்லை. மேலும், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற மிகப் பெரிய தோல்வியால், மைதானத்திலேயே கடிந்துகொண்ட சஞ்சீவ் கோயங்கா ராகுலிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான விடியோக்கள் அப்போது சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

சரியாக விளையாடவில்லை என லக்னௌ அணியில் இருந்து வெளியேறிய கே.எல். ராகுலை தில்லி அணி ஏலத்தில் எடுத்தது. கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு வீரராக தொடர்ந்து விளையாடி வருகிறார்.

மைதானத்தில் வைத்து அவமானப்படுத்தப்பட்டதற்கு அங்கு வைத்தே அவர் தனது ஆட்டத்தின் மூலம் திருப்பி கொடுத்து விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள கே.எல். ராகுல் இந்தத் தொடரில், 3 அரைசதங்களுடன் 323 ரன்கள் குவித்து அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கைம்பெண்கள் உதவித்தொகையை உயா்த்தக் கோரிக்கை

குறைதீா் கூட்டத்தில் 250 மனுக்கள் அளிப்பு

இளைஞா்களுக்கு தொழில் பழகுநா் ஆணை

பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி

வளா்ச்சி குன்றிய சகோதரா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT