ஜியோ ஹாட்ஸ்டார். கோப்புப் படம்
ஐபிஎல்

ஜியோ ஹாட்ஸ்டார் 5 வாரங்களில் 10 கோடி சந்தாதாரர்கள்..! ரூ.10,000 கோடி வருமானம்!

ஜியோவும் ஹாட்ஸ்டாரும் இணைந்த பிறகு ஈட்டிய வருமானம் குறித்து...

DIN

ரிலையன்ஸ் நிறுவனமும் வால்ட் டிஸ்னி ஹாட்ஸ்டாரும் இணைந்து ஜியோ ஹாட்ஸ்டார் என்ற பெயரில் கடந்த பிப்.14, 2025 முதல் இயங்கி வருகின்றன.

ஐபிஎல் போட்டிகளை ஜியோ ஹாட்ஸ்டார் ஒளிபரப்பி வருகிறது. இதுவரை வெள்ளிக்கிழமை (ஏப்.25) உடன் ரூ.10,006 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜியோ ஹாட்ஸ்டாரில் கடந்த 5 வாரங்களில் 100 மில்லியன் (10 கோடி) சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது.

ரிலையன்ஸ் இன்டர்ஸ்ட்ரிஸ் அளித்த தகவலின்படி, “முக்கிய விளையாட்டு நிகழ்வான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, ஐபிஎல் போட்டிகளால் மார்ச்.25ஆம் தேதி வரை ஜியோ ஹாட்ஸ்டார் மாதத்திற்கு 503 மில்லியன் (50.3 கோடி) ஆக்டிவ் பயனாளர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் டிஜிட்டல் லைப்ரரியில் அதிகபட்சமான 320ஆயிரம் மணி நேரங்களைக் கொண்டதாக மாறியுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு போட்டியாக மார்க்கெட் மதிப்பில் 34 சதவிகிதம் ஜியோ ஹாட்ஸ்டார் பெற்றுள்ளதாகவும் மாதத்திற்கு 760 மில்லியன் (76 கோடி) பார்வையாளர்களைப் பெற்றுள்ளதாகவும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ், வால்ட் டிஸ்னி, வியாகாம் 18 மீடியா ஆகியவை கடந்த நவ.14, 2024இல் இணைவதாக அறிவித்தன.

ஜியோ ஹாட்ஸ்டார் கிரிக்கெட் போட்டிகளை குறிப்பாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புவதால் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐபிஎல் மட்டுமல்லாமல் மகளிர் கிரிக்கெட், கால்பந்து, இருதரப்பு தொடர்களையும் ஒளிபரப்புகின்றன.

ஐபிஎல் 2025இன் முதல் வாரத்தில் 38 சதவிகிதம் அதாவது 1.4 பில்லியன் டிஜிட்டல் பார்வைகளை ஜியோ ஹாட்ஸ்டார் கடந்துள்ளது.

ஜியோ ஹாட்ஸ்டாரில் ஐசிசி உலகக் கோப்பை 2023-ஐ விட ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-இல் அதிகமான பார்வைகளைப் பெற்று, இதற்கு முந்தையை சாதனைகளை எல்லாம் இந்தத் தொடர் முறியடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜியோ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஒளிபரப்புவதால் கூடுதலாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் வரும் மே மாதம் 25ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது கவனிக்கத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன், பணம் திருட்டு

தண்டவாளத்தில் கல்: ரயிலை கவிழ்க்க சதியா?

கொடிக்கம்பங்களை அகற்ற இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு

பாய்லா் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு

வால்பாறை எஸ்டேட் குடியிருப்புகளை சேதப்படுத்திய யானைகள்

SCROLL FOR NEXT