படம் | AP
ஐபிஎல்

மழையால் தாமதமாகும் குவாலிஃபையர் 2; மும்பை இந்தியன்ஸுக்கு ஆபத்தா?

பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான குவாலிஃபையர் 2 போட்டி மழையால் தாமதம் ஆகியுள்ளது.

DIN

பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான குவாலிஃபையர் 2 போட்டி மழையால் தாமதம் ஆகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் இன்று (ஜூன் 1) நடைபெறும் குவாலிஃபையர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட் செய்யவுள்ளது.

அகமதாபாதில் மழை பெய்து வருவதால் போட்டி தொடங்குவதில் தாமதமாகியுள்ளது. மழை நீடிக்கும் பட்சத்தில் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்படும்.

மழையின் காரணமாக போட்டியை நடத்த முடியாத சூழல் உருவானால், அது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பாதகமாக அமையும்.

லீக் சுற்றில் புள்ளிப்பட்டியலில் பெற்ற இடத்தின் அடிப்படையில், பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றதாக அறிவிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT