ஷ்ரேயாஸ் ஐயர் படம் | AP
ஐபிஎல்

மிக முக்கியமான போட்டிகளில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்: ஷ்ரேயாஸ் ஐயர்

மிக முக்கியமான போட்டிகளில் சிறப்பாக விளையாடுவது தனக்கு மிகவும் பிடிக்கும் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

DIN

மிக முக்கியமான போட்டிகளில் சிறப்பாக விளையாடுவது தனக்கு மிகவும் பிடிக்கும் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. அதிரடியாக விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

மிகப் பெரிய தருணங்களை விரும்புகிறேன்

அதிரடியாக விளையாடி பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற உதவிய ஷ்ரேயாஸ் ஐயர், மிகப் பெரிய தருணங்களில் நன்றாக விளையாடுவது தனக்கு மிகவும் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: நேர்மையாக கூறவேண்டுமென்றால், என்னுடைய வெற்றியின் ரகசியம் என்னவென்று எனக்குத் தெரியாது. மிகப் பெரிய தருணங்கள் எனக்கு பிடிக்கும். மிகப் பெரிய தருணங்களில் எவ்வளவு அமைதியாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு பெரிய முடிவுகள் உங்களுக்கு கிடைக்கும் என எனக்கும், அணி வீரர்களிடத்திலும் எப்போதும் கூறுவேன்.

மும்பைக்கு எதிரான போட்டி அதற்கான சரியான உதாரணம் என நினைக்கிறேன். மிகவும் பதற்றமாக இருப்பதைக் காட்டிலும், அமைதியாக இருப்பதில் கவனம் செலுத்தினேன். போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற எண்ணத்தை பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் அனைவரிடத்திலும் பார்க்க முடிந்தது. பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடினார்கள் என்றார்.

அகமதாபாதில் நாளை (ஜூன் 3) நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் நிலையத்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு! வைரல் விடியோ!

எல் & டி பங்குகளை கொள்முதல் தொடர்ந்து, சென்செக்ஸ் 144 புள்ளிகள் உயர்வு!

ஓவல் டெஸ்ட்டில் ஸ்டோக்ஸ் விலகல்..! இங்கிலாந்து அணியில் 4 மாற்றங்கள்!

ரஷியாவில் 11 மணிநேரம் கழித்து சுனாமி எச்சரிக்கை வாபஸ்!

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

SCROLL FOR NEXT