ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து முத்தமிட்ட பஞ்சாப் அணி உரிமையாளர் நெஸ் வாதியா. 
ஐபிஎல்

ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து முத்தமிட்ட பஞ்சாப் அணி உரிமையாளர்!

ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து முத்தமிட்ட பஞ்சாப் அணி உரிமையாளர் பற்றி...

DIN

ஐபிஎல்லில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து அந்த அணியின் உரிமையாளர் முத்தமிட்ட விடியோக்கள் இணைத்தில் வைரலாகி வருகின்றன.

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற குவாலிஃபையர் 2-ல் பரபரப்பான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றிருக்கிறது.

அனைவரும் வியக்கவைக்கும் வகையில் 204 ரன்கள் இலக்கை விரட்டி அதிரடியாக விளையாடிய பஞ்சாப் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் 87* ரன்கள் விளாசி சிக்ஸருடன் ஆட்டத்தை சிறப்பாக முடித்து வைத்தார்.

மேலும், மூன்று வெவ்வேறு அணிகளை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற கேப்டன் என்ற சிறப்பையும் பெற்றார் ஷ்ரேயாஸ் ஐயர். நாளை(ஜூன் 3) நடைபெறும் மகுடத்துக்கான ஆட்டத்தில் பஞ்சாப் - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

போட்டி முடிந்ததும், பஞ்சாப் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அப்போது கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாதியா இருவரும் இணைந்து கேக் வெட்டினர். கேக்கை ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஊட்டிய நெஸ் வாதியா வெற்றிக் கொண்டாட்டத்தில் அவரைக் கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டார்.

இதைக் கண்டு ஒருவிதமான முகச் சுழிப்புடன் ஒரு டிஸ்யூ பேப்பர் எடுத்து கன்னத்தைத் துடைத்துக் கொண்டு ஷ்ரேயாஸ் ஐயர் அங்கிருந்து நகர்ந்தார். இதற்கான விடியோக்கள் தற்போது இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க: மிக முக்கியமான போட்டிகளில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்: ஷ்ரேயாஸ் ஐயர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏவிசி கல்லூரியில் பாட்டுப்போட்டி

அரசினா் மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

100 அரசுப் பள்ளிகளில் மாணவா் மன்றங்கள் - தில்லி அரசு முடிவு

மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

பேருந்தில் தொடங்கியபடி பயணம்: கல்லூரி மாணவனின் கால் விரல்கள் துண்டிப்பு

SCROLL FOR NEXT