ஒட்டுமொத்த கர்நாடகமும் ஆர்சிபி பின்னால் நிற்கிறது: துணை முதல்வர் சிவக்குமார் வாழ்த்து!
ஒட்டுமொத்த கர்நாடகமும் உங்கள்(ஆர்சிபி) பின்னால் நிற்கிறது: துணை முதல்வர் சிவக்குமார்
பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல விடியோ பதிவிட்டு வாழ்த்தியுள்ளார் கர்நாடக துணை முதல்வர் டி. கே. சிவக்குமார்.
அதில், ஒட்டுமொத்த கர்நாடகமும் உங்கள் பின்னால் நிற்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.
சிவக்குமார் வெளியிட்டுள்ள சிறப்பு காணொலியில் அவர் பேசியிருப்பதாவது: ”18 ஆண்டு கால துணிச்சல்மிகு காத்திருப்பு இது...
Advertisement
Advertisement
ஒவ்வொருத்தருடைய பிரார்த்தனைக்கும், ஒவ்வொருவரின் கைத்தட்டலுக்கும், ஒவ்வொருவரின் மனமுறிவுக்கும் - இவையனைத்துக்கும் இன்றுடன் முடிவுரை...”
”ஒரு ஆட்டம் என்பதையும் தாண்டிய விஷயம் இது...
இது நம்முடைய தருணம், நமது கோப்பை...
ஆர்சிபிக்கு வாழ்த்துகள் - கர்நாடகம் உங்கள் பக்கம் நிற்கிறது!” என்று பேசி பதிவிட்டுள்ளார்.
முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்புடன், இன்று(ஜூன் 3) அகமதாபாதில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
ஆர்சிபி சீருடையில் சிவக்குமார் பேசிய விடியோவைக் காண...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.