ஐபிஎல் நிறைவு விழா.. 
ஐபிஎல்

ஐபிஎல் நிறைவு விழாவில் இந்திய ஆயுதப்படைகளுக்கு மரியாதை!

ஐபிஎல் நிறைவு விழாவில் இந்திய ஆயுதப்படைகளுக்கு மரியாதை செலுத்தியதைப் பற்றி...

DIN

ஐபிஎல் நிறைவு விழாவில் இந்திய ஆயுதப்படைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக விமானப் படைகளில் போர் விமான அணிவகுப்பும் நடைபெற்றது.

நடப்பு ஐபிஎல் தொடரின் அகமதாபாதில் நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்தப் போட்டிக்கு முன்னதாக நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல முன்னணி பாடகர் சங்கர் மகாதேவன் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆபரேஷன் சிந்தூரின் போது சிறப்பாக செயல்பட்ட ஆயுதப் படைகளை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்தியாவின் உணர்வைக் கொண்டாடும் வகையிலான பாடல்களைப் பாடிய சங்கர் மகாதேவனுடன் இணைந்து அவரது மகன்கள் சித்தார்த் மற்றும் சிவம் மகாதேவன் ஆகியோரும் பாடல்கள் பாடினர்.

நிறைவு விழாவில் பாடல்கள் பாடியது குறித்து சங்கர் மகாதேவன் பேசுகையில், “ஆயுதப் படைகளுக்காக மரியாதை செலுத்த வாய்ப்பு கிடைத்ததில் தான் மிகவும் மகிழ்ச்சி.

இந்தியாவில் கிரிக்கெட் பெரிய விளையாட்டு. நிறைவு விழாவில் பாடுவதற்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி. எனது இரு மகன்களுடன் இணைந்து பாடியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

இதையும் படிக்க: 1,60,000 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன! ஆஷஸ் தொடக்க நாள் விற்பனை அமோகம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி பாதையைத் தொடர்ந்து பின்பற்றுவோம்! மோடி

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்!

ஆசியக் கோப்பையை ஐக்கிய அமீரகத்திடம் ஒப்படைத்தார் நக்வி!

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு

நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிறைவு விழா! ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு!

SCROLL FOR NEXT