முன்னாள் இந்திய வீரர் கபில் தேவ். ENS
ஐபிஎல்

கொண்டாட்டத்தை விட உயிர் முக்கியமானது: கபில் தேவ்

பெங்களூரில் நடைபெற்ற விபத்து குறித்து முன்னாள் வீரர் கபில் தேவ் கூறியதாவது...

DIN

பெங்களூரில் நடைபெற்ற விபத்து குறித்து முன்னாள் வீரர் கபில் தேவ் கொண்டாட்டத்தை விட உயிர் முக்கியமானது எனக் கூறியுள்ளார்.

ஆர்சிபி அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக கோப்பை வென்றது. இதன் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்.

சின்னசாமி திடலுக்கு அருகே சுமார் 2-2.5 லட்சம் மக்கள் குவிந்தனர். இதனால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மக்கள் உயிரிழந்தனர்.

இது குறித்து உலகக் கோப்பையை வென்ற முன்னாள் இந்திய வீரர் கபில் தேவ் கூறியதாவது:

இது குறித்து மிகவும் கவலையாக உணர்கிறேன். நாம் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ள வேண்டும். அடுத்த முறை இந்தமாதிரி வெற்றிக் கொண்டாட்டத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

மக்கள் தவறு செய்வார்கள். கொண்டாத்தினால் உயிரை விடும் அளவுக்கு இந்தத் தவறுகளின் அளவை மீறக்கூடாது.

வருங்காலங்களில் எந்த அணியாவது வென்றால் அமைதியாக இருங்கள். கொண்டாட்டங்களை விட உயிர் முக்கியமானது என்றார்.

இந்த விபத்தில் பலியோனர் குடும்பத்திற்கு ஆர்சிபி அணி, கர்நாடக அரசு தலா ரூ.10 லட்சம் அளிப்பதாகக் கூறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

வீரவநல்லூரில் புதிய சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு

மானூரில் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி மாணவா்கள் போராட்டம்

முக்கூடலில் சாா் பதிவாளா் அலுவலகம் திறப்பு

புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT