ரச்சின் ரவீந்திரா, ஆண்ட்ரே சித்தார்த்.  படம்: எக்ஸ் / முஃபாட்டல் ஹோக்ரா.
ஐபிஎல்

ஐபிஎல் 2025: அண்ணன்-தம்பியா இந்த சிஎஸ்கே வீரர்கள்?

இரண்டு சிஎஸ்கே வீரர்கள் உடன் பிறந்த சகோதரர்கள் போலிருக்கிறார்கள்.

DIN

இரண்டு சிஎஸ்கே வீரர்கள் சகோதரர்கள் போலிருக்கிறார்கள் என்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் போட்டிகள் இன்றுமுதல் (மார்ச்.22) தொடங்குகின்றன. சிஎஸ்கே அணிக்கு நாளை இரவு மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தனது முதல் போட்டியில் சேப்பாகில் விளையாட இருக்கிறது.

கடந்த சீசனில் தோனி கேப்டன் பொறுப்பை துறக்க, ருதுராஜ் கெய்க்வாட் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

கடந்த சீசனில் சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் செல்லாமலே வெளியேறியது.

சிஎஸ்கே அணியில் நியூசிலாந்தைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திராவும் தமிழகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரே சித்தார்த்தும் பார்ப்பதற்கு சகோதரர்கள் மாதிரியே இருக்கிறார்கள்.

சமீபத்தில் எடுத்த இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரச்சின் கண்ணாடி அணிந்தால் ஆண்ட்ரே சித்தார்த் மாதிரியே இருக்கும் எனவும் ரச்சினுக்கு எதாவதென்றால் சித்தார்த்தை களத்தில் இறக்கலாம் என்றும் சமூக ஊடகங்களில் ஜாலியாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்தப் படத்துக்கு உடன்பிறவா சகோதரர்கள் என சிஎஸ்கே ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?

பழமொழி மருத்துவம்

பேரறிஞர் அண்ணா (வாழ்க்கை வரலாறு)

தமிழர் பண்பாடு மறைவனவும் மீள்வனவும்

பாலியல் வசீகரமும், வக்கிரமும்!

SCROLL FOR NEXT