படம் | ஐபிஎல்
ஐபிஎல்

மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது எப்படி? என்ன சொல்கிறார் ரச்சின் ரவீந்திரா?

முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரச்சின் ரவீந்திரா பேசியுள்ளார்.

DIN

முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரச்சின் ரவீந்திரா பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நேற்று முன் தினம் (மார்ச் 22) தொடங்கியது. ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது. சென்னை சூப்பர் கிங்ஸில் பந்துவீச்சில் நூர் அகமது அபாரமாக செயல்பட்டார். பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா சிறப்பாக செயல்பட்டார்.

சுழற்பந்துவீச்சாளர்களுக்கு புகழாரம்

இந்த ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கிய நிலையில், மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் அபாரமாக பந்துவீசிய சிஎஸ்கேவின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ரச்சின் ரவீந்திரா புகழாரம் சூட்டியுள்ளார்.

நூர் அகமது

மும்பைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது குறித்து ரச்சின் ரவீந்திரா பேசியதாவது: ரவிச்சந்திரன் அஸ்வின் உலகத் தரத்திலான சிறந்த பந்துவீச்சாளர். அவருக்கு எதிராக நான் விளையாடியுள்ளேன். அவருடைய அனுபவம், கிரிக்கெட் குறித்த அறிவு, பந்துவீச்சு தொடர்பாக அவர் கொடுக்கும் அறிவுரை அனைத்தும் சிறப்பாக இருக்கும். ஆட்டத்தினை நன்றாக புரிந்துகொண்டு அதற்கேற்ப சிறப்பாக சிந்தித்து செயல்படக் கூடியவர். அவரைப் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் சிஎஸ்கே அணியில் இணைந்து விளையாடுவதை கௌரவமாக கருதுகிறேன்.

சிஎஸ்கேவில் சுழற்பந்துவீச்சு வரிசை மிகவும் வலுவாக உள்ளது. அணியில் சுழற்பந்துவீச்சு வலுவாக இருப்பது அணி சமபலத்துடன் இருப்பதை உறுதி செய்கிறது. சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டது அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது என்றார்.

மும்பைக்கு எதிரான நேற்றையப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT