பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் அதிரடியாக ரன்களை குவித்தார்கள்.  படம்: ஏபி
ஐபிஎல்

16 சிக்ஸர்கள், 22 பவுண்டரிகள்: பஞ்சாப் 243 ரன்கள் குவிப்பு!

பஞ்சாப் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸுக்கு 244 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

DIN

பஞ்சாப் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸுக்கு 244 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் 5ஆவது போட்டியில் பஞ்சாப், குஜ்ராத் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரியன்ஷ் ஆர்யா 47 ரன்கள் குவித்தார்.

அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஷ் ஐயர் அதிரடியாக விளையாடி 97 ரன்களை குவித்தார்.

தனது முதல் சதத்தினை நிறைவு செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷஷாங் சிங் அதிரடியாக விளையாடியதால் அவருக்கு கடைசி ஓவரில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.

பஞ்சாப் அணியின் ஸ்கோர் கார்டு 243/5

பிரியன்ஷ் ஆர்யா - 47

பிரப்சிம்ரன் சிங் - 5

ஷ்ரேயாஷ் ஐயர் - 97*

அஸ்மத்துல்லா ஓமர்சாய் - 16

க்ளென் மேக்ஸ்வெல் - 0

மார்கஸ் ஸ்டாய்னிஸ் - 20

சஷாங் சிங் - 44*

குஜராத் சார்பில் சாய் கிஷோர் 3, ரபாடா, ரஷித் கான் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

கோவை சம்பவம்: தடவியல் நிபுணர்கள் சோதனை! நடந்தது என்ன?

இளையான்குடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்-கல்வீச்சு: 5 போ் காயம்

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

SCROLL FOR NEXT