டி20 கிரிக்கெட்டில் 2 நாளில் 3 வீரர்கள் 97 ரன்கள் எடுத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
டி20 கிரிக்கெட் உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்துவரும் ஒரு கிரிக்கெட் வகைமையாக இருக்கிறது. இதில் மூன்று வீரர்கள் ஒரே ரன்னில் ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடியது கவனம் ஈர்த்துள்ளது.
நாள் 1: (மார்ச் 25 இரவு)
அதே நாளில் ஐபிஎல் தொடரில் இரவு பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 97 ரன்கள் (42 பந்துகளில்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நாள் 2 : (மார்ச்.26 காலை)
இதில் நியூசிலாந்து அணியில் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டிம் செய்ஃபெர்ட் 97 ரன்கள் (38 பந்துகளில்) எடுத்து ஆட்டமிழக்காமல் அசத்தினார்.
நாள் 2: (மார்ச்.26 இரவு)
மற்றுமொரு ஐபிஎல் போட்டியில் கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர் குயின்டன் டி காக் 97 (61 பந்துகளில்) ரன்கள் அடுத்து ஆட்ட நாயகன் விருதுபெற்றார்.
ஷ்ரேயாஸ் ஐயர், டிம் செய்ஃபெர்ட், டி காக் என மூவரும் சதம் அடிக்காமல் முடியாமல் போனதைவிட ஒரேமாதிரி 97 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.