படம் | ஐபிஎல்
ஐபிஎல்

197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; விக்கெட்டுகளை இழந்து திணறும் சிஎஸ்கே!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆர்சிபி முதலில் விளையாடியது.

ரஜத் படிதார் அரைசதம், 197 ரன்கள் இலக்கு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் விராட் கோலி இருவரும் களமிறங்கினர். பில் சால்ட் ஆர்சிபிக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தார். பில் சால்ட் அதிரடியாக விளையாட விராட் கோலி மிகவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பில் சால்ட் 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

இதனையடுத்து, விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஜோடி சேர்ந்தனர். படிக்கல் வந்த வேகத்தில் தனது அதிரடியைத் தொடங்கினார். அவர் 14 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதன் பின், களமிறங்கிய கேப்டன் ரஜத் படிதாரும் அதிரடியைத் தொடர்ந்தார். தொடக்கம் முதலே நிதானமாக விளையாடிய விராட் கோலி 30 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து நூர் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின், களமிறங்கிய லியம் லிவிங்ஸ்டன் 10 ரன்கள், ஜித்தேஷ் சர்மா 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய கேப்டன் ரஜத் படிதார் 32 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

ஆட்டத்தின் கடைசி ஓவரில் டிம் டேவிட், சாம் கரண் பந்துவீச்சில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதன் மூலம், ஆர்சிபி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே தரப்பில் நூர் அகமது 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மதீஷா பதிரானா 2 விக்கெட்டுகளையும், கலீல் அகமது மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் சிஎஸ்கே 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. ராகுல் திரிபாதி 5 ரன்கள், ருதுராஜ் கெய்க்வாட் (0 ரன்) மற்றும் தீபக் ஹூடா (4 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“சிறுவயதிலேயே தமிழ் கற்றிருக்கலாம் என விரும்புகிறேன்!” பிரதமர் மோடி உரை! | Coimbatore

சபரிமலை தரிசனம்: 5000 பேருக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங்!

வாரீ எனர்ஜிஸ் பங்குகள் 3% சரிவு!

தமிழக அரசு அனுப்பிய மெட்ரோ திட்ட அறிக்கையில் குறைகள்!

செமெரு எரிமலை வெடிப்பு! 54,000 அடி உயரம் வரை எழுந்த புகை! Indonesia

SCROLL FOR NEXT