சாம் கரண், எம்.எஸ்.தோனி, டெவால்டு பிரீவிஸ் படங்கள்: எக்ஸ்/ சிஎஸ்கே, ஐபிஎல்
ஐபிஎல்

சாம் கரண் ஒரு போராளி, டெவால்டு பிரீவிஸ் எங்களின் சொத்து: எம்.எஸ். தோனி

பஞ்சாப் கிங்ஸுடனான தோல்விக்குப் பிறகு சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி கூறியதாவது...

DIN

பஞ்சாப் உடனான தோல்விக்குப் பிறகு சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி கேட்ச்சுகளை தவறவிடாமல் பிடிக்க வேண்டும் எனக் கூறினார்.

சேப்பாகில் நேற்றிரவு (ஏப்.30) நடந்த போட்டியில் 19.4ஆவது ஓவரில் பஞ்சாப் த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியில் சாம் கரண் 88 ரன்கள் குவித்தார்.

பதிரான தவறவிட்ட கேட்ச், 17ஆவது ஓவரில் 20 ரன்கள் கொடுத்ததும் ஆடத்தை மாற்றியது.

இந்தத் தோல்விக்குப் பிறகு தோனி பேசியதாவது:

அந்த 7 பந்துகள் மிக முக்கியானவை

பேட்டிங் நன்றாக விளையாடினார்கள். முதல்முறையாக ஓரளவுக்கு நல்ல ரன்களை அடித்தோம். ஆனால், அது போதுமானதாக இல்லை.

இன்னும் கூடுதலாக சில ரன்களை அடித்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. நாங்கள் கேட்ச்சுகளை சரியாக எடுக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

பிரீவிஸ், சாம் இடையேயான பார்ட்னர்ஷிப் நன்றாக இருந்தது. நாங்கள் கடைசி 4 பந்துகள் விளையாடவில்லை, கடைசிக்கு முந்தைய ஓவரில் 4 பேட்டர்கள் ஆட்டமிழந்தோம். இந்தமாதிரியான போட்டிகளில் அந்த 7 பந்துகள் மிக முக்கியானவை.

சாம் கரண் ஒரு போராளி

சாம் கரண் ஒரு போராளி. அது நம் அனைவருக்கும் தெரியும். அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பங்களிக்க நினைக்கிறார். அவருக்கு மெதுவான பிட்ச்களில் வாய்ப்பளித்ததால் அவருக்கு கடினமாகவே இருந்தது.

சொந்த மண்ணில் தற்போதுதான் சிறந்த ஆடுகளத்தைப் பெற்றுள்ளோம். அதனால்தான் கூடுதலாக 15 ரன்கள் தேவை எனக் கூறுகிறேன்.

டெவால்டு பிரீவிஸ் எங்களின் சொத்து

பிரீவிஸ் மிடில் ஆர்டரில் நல்ல கணங்களை உருவாக்குகிறார். நல்ல பந்துகளை சிக்ஸர் அடிக்கும் ஆற்றல் அவரிடம் இருக்கிறது.

ஃபீல்டிங்கிலும் அவர் நல்ல ஆற்றலைக் கொண்டு வருகிறார். அவர் விளையாடும் விதம் எனக்குப் பிடித்துள்ளது. அவர் எங்கள் சொத்தாக மாறுவார் என நினைக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாரை விமர்சிப்பவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போவார்கள்! - ஜெயக்குமார்

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளேன்! - பிரிடோரியா வீரர் பிரேவிஸ்

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

SCROLL FOR NEXT