ஹார்திக் பாண்டியா படம்: ஏபி
ஐபிஎல்

மும்பையின் தொடர்ச்சியான வெற்றிக்குக் காரணம் என்ன? மனம் திறந்த ஹார்திக் பாண்டியா!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு மும்பை கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறியதாவது...

DIN

ஐபிஎல் போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் (மே.1) மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி அபார வெற்றி கண்டது.

முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் சோ்க்க, ராஜஸ்தான் 16.1 ஓவா்களில் 117 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தப் போட்டியின் வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 14 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.

இந்த வெற்றி குறித்து மும்பை கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறியதாவது:

சாதாரணமான கிரிக்கெட் விளையாடுகிறோம்

நாங்கள் அனைவரும் சாதாரணமான கிரிக்கெட் விளையாட வேண்டுமென்ற விஷயத்தில் தெளிவாக இருக்கிறோம். இது எங்களுக்கு வேலை செய்கிறது, அதிலேயே தொடர்வோம் என நினைக்கிறேன்.

நாங்கள் மிகவும் தன்னடக்கமாகவும் ஒழுக்கமாகவும் போட்டியில் முழு கவனமாகவும் இருக்க விரும்புகிறேன்.

நாங்கள் கூடுதலாக 15 ரன்களை பெற்றிருக்கலாம். நானும் சூர்யாவும் பேசிக்கொண்டது என்னெவென்றால் குறைவான ரிஸ்க் உள்ள ஷாட்டுகளை ஆட வேண்டுமென்பதே.

ஒவ்வொரு ஷாட்டுக்கும் மதிப்பு இருக்க வேண்டுமென நாங்கள் பேசிக்கொண்டோம்.

பேட்ஸ்மேன்ஷிப் முக்கியம்

ரோஹித் சர்மாவும் ரியான் ரிக்கல்ட்டும் அதேமாதிரிதான் விளையாடினார்கள். இது முற்றிலும் சிறப்பானது.

இதில் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறதான் என்பதைப் பொறுத்ததல்ல, அந்தச் சூழ்நிலைக்கு என்ன தேவை என்பதே முக்கியமானது.

வீரர்கள் மீண்டும் தங்களது பேட்ஸ்மேன்ஷிப்புக்கு (திறமை, தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆடுவது) திரும்புகிறார்கள். அணியாக நாங்கள் சரியான பேட்மேன்ஷிப்பில் விளையாடுகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வசந்த் ரவியின் இந்திரா ஓடிடி தேதி!

மகாராஷ்டிரம்: 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

நீ சிங்கம்... காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிக் பாஸ் செளந்தர்யா!

கூடலூரில் பூக்கத் தொடங்கிய குறிஞ்சி மலர்கள்!

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

SCROLL FOR NEXT