சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் படம்: ஐபிஎல்/ பிசிசிஐ
ஐபிஎல்

ஒரே ஓவரில் 33 ரன்கள் வழங்கிய கலீல் அகமது குறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் கூறியதென்ன?

கலீல் அகமது குறித்து சிஎஸ்கேவின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் கூறியதாவது...

DIN

தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்த ஒரே ஓவரில் 33 ரன்கள் அளித்த கலீல் அகமதை நம்புவதாக சிஎஸ்கேவின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் கூறியுள்ளார்.

பெங்களூரு சின்னசாமி திடலில் நேற்றிரவு (மே.3) நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த ஆர்சிபி 213/5 ரன்கள் எடுத்தது.

கலீல் அகமது வீசிய 19ஆவது ஓவரில் 33 ரன்களை ஆர்சிபி அணியின் ரொமாரியோ ஷெப்பர்டு விளாசினார். மொத்தமாக கலீல் அகமது 3 ஓவர்களில் 65 ரன்களை வாரி வழங்கினார்.

அடுத்ததாக விளையாடிய சிஸ்கே அணி 20 ஓவர்களில் 211/5 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் 15 ரன்கள் என்ற இலக்கை எட்டமுடியாமல் சிஎஸ்கே அணி தோல்வியுற்றது.

இது குறித்து சிஎஸ்கேவின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் கூறியதாவது:

இந்த சீசனில் கலீல் அகமது எங்களுக்கு சிறப்பாக செய்துள்ளார். அதனால் அன்ஷுல் கம்போஜுக்குப் பதிலாக கலீல் அகமதை தோனி நம்பியதில் தவறில்லை.

கம்போஜ் தனக்குக் கொடுக்கப்பட்ட பங்கினை சிறப்பாக செய்து வருகிறார். அவருக்கு டெத் ஓவரிலும் பந்துவீசும் திறமை இருக்கிறது. அவரும் நல்ல ஆப்ஷந்தான். ஆனால், கலீலை எடுத்துவந்ததால் இப்படி ஆகுமென யாரும் நினைக்கவில்லை.

ஒரு பெரிய ஓவர் கிடைத்திருந்தாலும் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம். ஆனால், ஆர்சிபி அணியினர் நன்றாக பந்துவீசினார்கள்.

கடைசியில் மலையேற்றம்போல கடினமாக இருக்குமெனத் தெரியும். ஆனால், நாங்கள் நல்ல ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடினோம்.

இந்தப் போட்டியில் நன்றாக விளையாடினோம். இருப்பினும் கடைசி ஓவர்களில் ஃபீல்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்தாண்டு மிகவும் தடுமாற்றமாகவே இருக்கிறது. ஆனால், சில தனிப்பட்ட வீரர்களின் செயல்பாடுகள் பெருமைகொள்ளும் விதமாக இருக்கின்றன.

அடுத்தாண்டு நல்ல அணியாக வருவோம். இருப்பினும் அனுபவம் வாய்ந்த வீரர்களை மிகவும் நம்புகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரானுடன் உறவை முறித்த ஆஸ்திரேலியா! தூதர் வெளியேற உத்தரவு!

காதலே காதலே... ஐஸ்வர்யா லட்சுமி!

நொய்டா வரதட்சிணை கொலையில் திடீர் திருப்பம்: நிக்கியின் கணவர் மீது ஏற்கனவே வழக்கு!

4 ஆண்டு தடைக்குப் பின்... ஒருநாள் அணிக்குத் திரும்பும் ஜிம்பாப்வே ஜாம்பவான்!

வெள்ளத்தில் மூழ்கிய 170 கிராமங்கள்: ஒடிசாவில் 2 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

SCROLL FOR NEXT