கிளன் மேக்ஸ்வெல்லுக்கு மாற்று வீரராக பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான கிளன் மேக்ஸ்வெல்லுக்கு இந்த சீசன் சிறப்பானதாக அமையவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய அவர் வெறும் 48 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். விளையாடிய 7 போட்டிகளில் 6 போட்டிகளில் அவர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் கிளன் மேக்ஸ்வெல்லுக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகினார்.
மாற்று வீரராக ஆஸி. ஆல்ரவுண்டர்
காயம் காரணமாக மேக்ஸ்வெல் விலகிய நிலையில், அவருக்கு மாற்று வீரராக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான மிட்ச் ஓவன் பஞ்சாப் கிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கை விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய கிளன் மேக்ஸ்வெல்லுக்குப் பதிலாக, பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆல்ரவுண்டர் மிட்ச் ஓவன் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 வயதாகும் மிட்ச் ஓவன், வலதுகை வேகப் பந்துவீச்சாளர் மற்றும் வலதுகை பேட்ஸ்மேன் ஆவார். அவர் இதுவரை 14 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுவரை 34 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள மிட்ச் ஓவன் 646 ரன்கள் குவித்துள்ளார். அவர் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இதையும் படிக்க: அரைசதம் விளாசிய ஆண்ட்ரே ரஸல்; ராஜஸ்தானுக்கு 207 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான மிட்ச் ஓவன் ரூ.3 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.