டெவால்டு ப்ரீவிஸ் ஆட்டமிழப்பு, ரோஹித் தாமதமாக ரிவிவ் கேட்கும் காட்சிகள். படங்கள்: ஜியோ ஹாட்ஸ்டார்.
ஐபிஎல்

டெவால்டு ப்ரீவிஸ் ஆட்டமிழப்பு: மீண்டும் சர்ச்சையாகும் நடுவரின் தீர்ப்பு!

ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர் டெவால்டு ப்ரீவிஸ் ஆட்டமிழப்பு சர்ச்சை குறித்து...

DIN

ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர் டெவால்டு ப்ரீவிஸ் ஆட்டமிழப்பு சர்ச்சையானது.

பெங்களூரு சின்னசாமி திடலில் நேற்றிரவு (மே.3) நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த ஆர்சிபி 213/5 ரன்கள் எடுத்தது.

அடுத்ததாக விளையாடிய சிஸ்கே அணி 20 ஓவர்களில் 211/5 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் 15 ரன்கள் என்ற இலக்கை எட்டமுடியாமல் 2 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வியுற்றது.

இந்தப் போட்டியில் சிஎஸ்கே பேட்டர் டெவால்டு ப்ரீவீஸுக்கு நடுவர் எல்பிடபிள்யூ கொடுப்பார்.

ஆடுகளத்தின் திரையில் டைமர் காட்டப்படாததால் டெவால்டு ப்ரீவிஸ் ரன்கள் எடுக்க ஓடுவார்.

நடுவர் அவுட் எனக் கொடுத்தால் 15 நொடிகளில் டிஆர்எஸ் எடுக்க வேண்டும்.

கடந்த மும்பை போட்டியில் ரோஹித் சர்மா டைமிங் முடிந்தும் ரிவிவ் கேட்க நடுவரும் ஒப்புக்கொண்டார்.

டெவால்டு ப்ரீவிஸ் முன்னமே ரிவிவ் கேட்டிருந்தால் ஆட்டமிழக்காமல் இருந்திருக்கலாம். சிஎஸ்கே அணியும் எளிதாக வென்றிருக்கும் என பலரும் கூறி வருகிறார்கள்.

திரையில் டைமிங் காட்டாதது போட்டியின் நடுவர்கள் மீதும் விமர்சனம் எழுந்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெய்ப்பூரில் பள்ளியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது

கோவையில் ஜி.டி. நாயுடு பாலம் அருகே விபத்து: காரில் சென்ற 3 பேர் பலி

நல்ல நாள் இன்று!

திருச்செந்தூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

கிராவல் மண் திருடியவா் கைது

SCROLL FOR NEXT