X | IPL
ஐபிஎல்

ஹைதராபாதை வெளியேற்றியது மழை!

ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய 55-ஆவது ஆட்டம், மழையால் பாதியில் கைவிடப்பட்டது.

DIN

ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் திங்கள்கிழமை மோதிய 55-ஆவது ஆட்டம், மழையால் பாதியில் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட் டது.

பிளே-ஆஃப் பந்தயத்தில் நிலைக்க இந்த ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்திலிருந்த ஹைதரபாத், தற்போது அந்த வாய்ப்பை இழந்து, 3-ஆவது அணியாக போட்டியிலிருந்து வெளியேறியது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் சேர்த்தது. மழை காரணமாக ஹைதராபாத் இன்னிங்ஸ் தொடங்குவது தாமதமாகி, பின்னர் மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது.

முன்னதாக டாஸ் வென்ற ஹைதராபாத், ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. டெல்லி பேட்டிங்கில் டாப் ஆர்டர் வீரர்களான கருண் நாயர் 0. ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் 3, அபிஷேக் பொரெல் 1 பவுண்டரியுடன் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இவர்கள் மூவருமே கம்மின்ஸ் ஓவரில் வீழ்ந்தனர்.

இதனால் 15 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை ளை இழந்து தடுமாறியது டெல்லி. இந்நிலையில், கே.எல்.ராகுலுடன் களத்திலிருந்த கேப்டன் அக்ஸர் படேல் 1 பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்பி னார். அடுத்து வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக ரன்கள் சேர்க்கத் தொடங்கினார். மறுபுறம் ராகுல் பவுண்டரியுடன் 10 ரன்களுக்கு விடை பெற்றார்.

7-ஆவது பேட்ட ராக வந்த விப்ராஜ் நிகம் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 18 ரன்களுக்கு 13-ஆவது ஓவரில் ரன் அவுட் செய்யப்பட, 62 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது டெல்லி. அப்போது வந்த ஆசு தோஷ்சர்மா, ஸ்டப்ஸுடன் இணைந்தார். இவர்கள் ஜோடி விக்கெட் சரிவைத் தடுத்து 7-ஆவது விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்து பிரிந்தது. ஆசுதோஷ் 26 பந்துகளில் 2பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 41 ரன்களுக்கு சாய்க்கப்பட்டார். ஓவர்கள் முடிவில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 4 பவுண்டரிகளு டன் 41, மிட்செல் ஸ்டார்க் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஹைதராபாத் பௌலிங்கில் பேட் கம்மின்ஸ் 3, ஜெயதேவ் உனத்கட், ஹர்ஷல் படேல், ஈஷான் மலிங்கா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

மழை விளையாடியது: பின்னர் ஹைதராபாத் இன்னிங்ஸ் தொடங்குவது, மழையால் தாமதமானது. மழை நின்ற பிறகும் மைதானத்தில் ஈரப்பதம் இருந்ததால், ஆட்டம் கைவிடப்படுவதாக 11.15 மணியளவில் அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! கனிமொழி தலைமையில் ஆலோசனை!

SCROLL FOR NEXT