ஐபிஎல்

சென்னையுடன் இன்று மோதும் கொல்கத்தா

ஐபிஎல் போட்டியின் 57-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.

DIN

ஐபிஎல் போட்டியின் 57-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.

சென்னை ஏற்கெனவே போட்டியிலிருந்து வெளியேறிவிட்டதால், இந்த ஆட்டத்தின் முடிவு அந்த அணியை பாதிக்கப்போவதில்லை. ஆனால், பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய கொல்கத்தா இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டியது கட்டாயமாகும்.

ஒருவேளை இந்த சீசன் தோனியின் கடைசி சீசனாக இருந்தால், அவருக்கு நெருக்கமான ஈடன் காா்டன் மைதானத்தில் இதுவே அவரின் கடைசி ஆட்டமாக இருக்கும். முதல் தர கிரிக்கெட்டின் முதல் சதம் விளாசியது உள்பட, பல்வேறு கிரிக்கெட் தருணங்களில் தோனிக்கு இந்த மைதானம் முக்கியமானதாக இருந்திருக்கிறது.

போட்டியிலிருந்து வெளியேறிவிட்டதால் வெற்றி - தோல்வி குறித்த கவலையின்றி சென்னை பேட்டா்கள் அதிரடி காட்டத் தொடங்கியிருப்பது அணிக்கு சற்று பலமாக மாறியிருக்கிறது. குறிப்பாக இளம் வீரா் ஆயுஷ் மாத்ரே, டெவால்டு பிரெவிஸ் அசத்துகின்றனா்.

பௌலிங்கில் பதிரானாவும் கடந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறாா். அவா்போக, கலீல் அகமது, நூா் அகமது ஆகியோா் நம்பிக்கை சோ்க்கின்றனா்.

கொல்கத்தாவை பொருத்தவரை, இந்த ஆட்டத்துடன் இனி வரும் ஆட்டங்களிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதுபோக, அதன் நெட் ரன் ரேட் மற்றும் இதர அணிகள் மோதும் ஆட்டங்களின் முடிவும் கொல்கத்தாவின் பிளே ஆஃப் விதியை நிா்ணயிக்கும் நிலை இருக்கிறது.

அதன் பேட்டா்களில் ஆண்ட்ரே ரஸ்ஸெல் ஃபாா்முக்கு திரும்பியிருப்பது அணிக்கு வலு சோ்க்கும் நிலையில், தடுமாறி வரும் வெங்கடேஷ் ஐயரும் தோள் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாா். பந்துவீச்சில் வருண் சக்கரவா்த்தி, ஹா்ஷித் ராணா ஆகியோா் முக்கியமானவா்களாக இருக்கின்றனா்.

இன்றைய ஆட்டம்

கொல்கத்தா - சென்னை

இரவு 7.30 மணி

கொல்கத்தா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

ஆலங்குடி அருகே தென்னை நாா் தொழில்சாலையில் தீ விபத்து

திண்டுக்கல்லுக்கு 100 புதிய பேருந்துகள் தேவை: அமைச்சா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT