ஐபிஎல்

ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தம்! ரசிகர்கள் வெளியேற்றம்!

பஞ்சாப் கிங்ஸ் - தில்லி கேபிடல்ஸ் இடையிலான போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது பற்றி...

DIN

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பஞ்சாப் கிங்ஸ் - தில்லி கேபிடல்ஸ் இடையிலான போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

ஐபிஎல் தொடரில் தர்மசாலாவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வந்தன.

இந்த நிலையில், தர்மசாலா திடலில் விளக்குகள் அணைக்கப்பட்டு போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. திடலில் உள்ள ரசிகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். வீரர்களும் உடனடியாக திடலை விட்டு வெளியேற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன்றன. பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் துல்லியத் தாக்குதலை மேற்கொண்டது.

இதனையடுத்து, பாகிஸ்தான் ஜம்மு - காஷ்மீரின் விமான நிலையங்கள் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டு வருவதும், இந்தியா அதனை வெற்றிகரமாக இடைமறித்து தாக்கி அழித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் இந்தியாவுக்கு முதல்முறையாகப் பதக்கம்: தமிழகத்தின் ஆனந்த்குமார் சாதனை!

அட... ஆண்ட்ரியா!

ஆகஸ்ட் மாதம் மொத்த பணவீக்கம் மீண்டும் உயர்வு!

கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்றார் வைஷாலி!

பிகாரில் நெருங்கும் தேர்தல்: ரூ.36,000 கோடியிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT