LSG vs SRH X | SRH
ஐபிஎல்

லக்னௌவை வென்றது ஹைதராபாத்!

ஐபிஎல் போட்டியின் 61-ஆவது ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸை வென்றது.

DIN

ஐபிஎல் போட்டியின் 61-ஆவது ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸை திங்கள்கிழமை வென்றது.

முதலில் லக்னெள 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் சேர்க்க, ஹைதராபாத் 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 206 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீசத் தயாரானது. லக்னௌ இன்னிங்ஸில் மிட்செல் மார்ஷ் - எய்டன் மார்க்ரம் இணை முதல் விக்கெட்டுக்கே 115 ரன்கள் சேர்த்து அசத்தியது.

மார்ஷ்6 பவுண்டரிகள், 4 சிக்ஸர் களுடன் 65 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த கேப்டன் ரிஷப் பந்த் 1 பவுண்டரியுடன் 7 ரன்களுக்கே வெளியேறினார்.

4ஆவதாக நிகோலஸ் பூரன் களம்புக, மார்க்ரம் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 61 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். பூரன் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 45 ரன்களுக்கு வீழ, ஷர்துல் தாக்குர் 4 அப்துல் சமத் 3 ரன்களுக்கு முடித்துக் கொண்டனர்.

ஓவர்கள் முடிவில் ரவி பிஷ்னோய் 0, ஆகாஷ் தீப் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹைதராபாத் தரப்பில் ஈஷான் மலிங்கா 2, ஹர்ஷ் துபே, ஹர்ஷல் படேல், நிதீஷ்குமார் ரெட்டி ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

அடுத்து 206 ரன்களை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணியில் அதர்வா டைட் 3 பவுண்டரிகளுடன் 13 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அபிஷேக் சர்மா- இஷான் கிஷண் கூட்டணி 2-ஆவது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தது.

அபிஷேக் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 59, இஷான் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஹென் ரிக் கிளாசென் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 47. சுமிண்டு மெண் டிஸ் 3 பவுண்டரிகளுடன் 32 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர்.

முடிவில் அனிகெத் வர்மா 5, நிதீஷ்குமார் ரெட்டி 5 ரன்களுடன் அணியை வெற்றிபெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

லக்னௌ பௌலிங்கில் திக் வேஷ் ரதி 2, வில் ஒரூர்க், ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

SCROLL FOR NEXT