கோப்புப் படம் 
ஐபிஎல்

நான் எப்போது அழுதேன்? 14 வயது வீரர் சூர்யவன்ஷி விளக்கம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி முதல் போட்டியில் அழுதது குறித்து பேசியுள்ளார்.

DIN

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி முதல் போட்டியில் அழுதது குறித்து பேசியுள்ளார்.

இந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணி மோசமாக விளையாடினாலும் அந்த அணியின் இளம் வீரர் 14 வயதில் பேட்டிங் செய்து உலக முழுவதும் கவனத்தை ஈர்த்தார்.

கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்பட பல பிரபலங்கள் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாழ்த்து கூறினார்கள்.

பிகார் முதல்வர் ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அளித்தது குறிப்பிடத்தக்கது.

சூர்யவன்ஷி தனது முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அசத்தினாட். 20 பந்துகளில் 34 ரன்கள் அடித்து மார்க்ரம் வீசிய பந்தில் ரிஷப் பந்திடம் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.

பின்னர், சூர்யவன்ஷி அழுதுகொண்டே வெளியேறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது குறித்து சூர்யவன்ஷி கூறியதாவது:

நான் ஏன் அழப்போகிறேன்? ஆட்டமிழந்தபோது திரையைப் பார்த்தேன். அதில் இருக்கும் அதிகப்படியான வெளிச்சத்தினால் எனது கண்கள் வலித்தது.

கண்களை அதிகமாக சிமிட்ட வேண்டியிருந்தது. அதனால் கண்ணைத் தேய்த்துவிட்டேன். அதைப் பலரும் நான் அழுததாக நினைத்தார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சீனா - பிரேசில் இணைந்து அமெரிக்காவுக்கு செம்மட்டி அடி! கதறும் டிரம்ப்!!

MGR-ஐ தாண்டி மகளிர் ஆதரவு ஸ்டாலினுக்கு அதிகமாக இருக்கு - கே.என்.நேரு

ஆசிய கோப்பை: லிட்டன் தாஸ் தலைமையில் வங்கதேச அணி! மூத்த வீரர்கள் புறக்கணிப்பு?

மதுபோதையில் கிணற்றில் குதித்து இளைஞர் தற்கொலை: காப்பாற்ற முயன்றவரும் நீரில் மூழ்கி பலி

வந்துவிட்டது 9 காரட் ஹால்மார்க் தங்க நகைகள்! விலையைப் பற்றி கவலை வேண்டாம்!!

SCROLL FOR NEXT