பாட் கம்மின்ஸ் - ஜிதேஷ் சர்மா 
ஐபிஎல்

பெங்களூரு, ஹைதராபாத் அணி கேப்டன்களுக்கு அபராதம்!

மெதுவாக பந்துவீசியதாக கேப்டன்கள் ரஜத் படிதார், பாட் கம்மின்ஸ் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

DIN

மெதுவாகப் பந்துவீசியதாகக் கூறி பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளின் கேப்டன்கள் ரஜத் படிதார் மற்றும் பாட் கம்மின்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தத் தொடரில் லீக் சுற்றின் 7 போட்டிகளுக்கு முன்னதாகவே, குஜராத், பஞ்சாப், பெங்களூரு, மும்பை ஆகிய அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இருப்பினும், முதலிரண்டு இடங்களைப் பிடிக்கப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நேற்றிரவு உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னௌவில் உள்ள எக்கானா மைதானத்தில் நடந்தப் போட்டியில் முன்னாள் சாம்பியனான ஹைதராபாத் அணி பெங்களூருவை 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறுதல் வெற்றியுடன் தொடரிலிருந்து வெளியேறியது.

இந்தப் போட்டியில் ஹைதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ் இந்தத் தொடரில் முதல் முறையாக ஐபிஎல் விதியை மீறி மெதுவாகப் பந்துவீசியதாகக் கூறி ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், நேற்றையப் போட்டியில் பெங்களூரு அணியின் பொறுப்பு கேப்டனாக ஜிதேஷ் சர்மா செயல்பட்டிருந்தாலும், அவருக்குப் பதிலாக ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி 2-வது முறையாக இந்தத் தொடரில் மெதுவாகப் பந்து வீசியதாகக் கூறி ரூ.24 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து இரு அணியில் உள்ள வீரர்கள், மாற்றுவீரர்கள் ஆகியோருக்கு போட்டிக் கட்டணத்திலிருந்து ரூ.6 லட்சம் அல்லது 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு! இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில்..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி!

பாஜகஉறவு முறிந்தது! கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் அணி அறிவிப்பு!-பண்ருட்டி ராமச்சந்திரன்

அறிவுசார் திட்டம் என்றாலே ஆக்கிரமிப்பு! ஆற்றுப்படுகையில் எதற்கு அரசின் திட்டங்கள்?அன்புமணி பேச்சு!

அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம்.பி. கேள்வி!

இந்த வார ஓடிடி படங்கள்!

SCROLL FOR NEXT