ஹார்திக் பாண்டியா படம் | PTI
ஐபிஎல்

150-வது ஐபிஎல் போட்டியில் விளையாடும் ஹார்திக் பாண்டியா!

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா அவரது 150-வது ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறார்.

DIN

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா அவரது 150-வது ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறார்.

ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மும்பை இந்தியன்ஸ் முதலில் விளையாடி வருகிறது.

150-வது போட்டியில் ஹார்திக் பாண்டியா

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான இன்றையப் போட்டி ஹார்திக் பாண்டியா விளையாடும் 150-வது ஐபிஎல் போட்டியாகும்.

மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமின்றி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகவும் ஹார்திக் பாண்டியா விளையாடியுள்ளார். இதுவரை 150 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ஹார்திக் பாண்டியா 2,686 ரன்கள் குவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை ஹார்திக் பாண்டியா மிகவும் வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார். இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, 8 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

பிளே ஆஃப் சுற்றுக்கும் மும்பை அணி தகுதி பெற்றுவிட்டது. இன்றையப் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நளினி சிதம்பரம் உறவினா் கொலை வழக்கு: 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்திவைப்பு

விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள கட்டடங்களின் உயரக் கட்டுப்பாடுகள்: சா்வதேச ஆய்வுக்கு அரசு திட்டம்

காதலி ஏமாற்றியதால் இளைஞா் வெளிநாட்டில் தற்கொலை

50-க்கும் குறைவான ஆயுதங்களால் பாகிஸ்தானை பின்வாங்க செய்த விமானப் படை!

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...? -மு. தமிமுன் அன்சாரி

SCROLL FOR NEXT