திக்வேஷ் ரதி, அஸ்வின், ரிஷப் பந்த்.  படங்கள்: ஏபி, சிஎஸ்கே.
ஐபிஎல்

திக்வேஷ் ரதியை அவமதித்த ரிஷப் பந்த்: அஸ்வின்

திக்வேஷ் ரதி செய்த ரன் அவுட்டுக்கு ரிஷப் பந்த் செயலை அஸ்வின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

DIN

திக்வேஷ் ரதி செய்த ரன் அவுட்டுக்கு ரிஷப் பந்த் செயலை கடுமையாக விமர்சித்து அஸ்வின் பேசியுள்ளார்.

நேற்றைய போட்டியில் ஆர்சிபி வீரர் ஜிதேஷ் சர்மாவை மன்கட் முறையில் லக்னௌ வீரர் ரன் அவுட் செய்தார். இதனை லக்னௌ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் வேண்டாம் என நடுவரிடம் முறையிடுவார்.

இது போட்டியையே மாற்றிய தருணமாக இருந்தது. ஜிதேஷ் சர்மா ஆட்ட நாயகன் விருது வென்றதுடன் குவாலிஃபயர் 1-க்கு தகுதிபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தமிழக வீரர் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் கூறியதாவது:

மோசமான கேப்டன் ரிஷப் பந்த்

திக் வேஷ் ரதி பந்துவீசும்போது ஜிதேஷ் வெளியேறாமல் இருந்தார். பின்னர் அது மூன்றாம் நடுவரிடம் சென்று நாட் அவுட் கொடுக்கப்பட்டது. அது பிரச்னை இல்லை. ஆனால், இதனை ரிஷப் பந்த் வேண்டாம் எனக் கூறியது என்ன மாதிரியான ஸ்போர்ட்மேன்ஷிப்? வளருங்கள் ரிஷப் பந்த்!

ஒரு கேள்வி கேட்கிறேன். திக்வேஷ் ரதி உங்களுடைய மகன் என வைத்துக்கொள்ளுங்கள். யார் இந்த விடியோவை பார்த்தாலும் உங்கள் மகனை கோடிக்கணக்கானவர்கள் முன்பாக ரிஷப் பந்த் விமர்சிக்கிறார்.

ரிஷப் பந்த் கேப்டன்சியில் சிறிது எல்லையை மீறிவிட்டார். பொதுவாக பந்துவீச்சாளர்களை பாதுகாப்பதுதான் கேப்டனின் வேலை. அவரைச் சிறியவனாக்குவதல்ல.

திக்வேஷ் ரதி என்னுடைய உறவினர் இல்லை

ரிஷப் பந்த் இது குறித்து முன்னமே லக்னௌ அணியில் பேசியுள்ளாரா தெரியவில்லை. கோடிக்கணக்கான மக்கள் முன்பாக ஒரு இளைஞரை இழிவுப்படுத்தாதீர்கள்.

நாம் வேறு யாருக்காவது அப்படி செய்வோமா? அது ஒரு அவமதிப்பு.

இந்த நிகழ்வு திவேஷ் ரதியை சிறியவனாக்கியிருக்கும். அவர் மீண்டும் இதனைச் செய்ய மாட்டார். மக்கள் கமெண்ட் செக்சனில் அவரை மீண்டும் செய்யக் கூடாதென்பார்கள்.

அவர் ஏன் செய்யக்கூடாது? திக்வேஷ் ரதி என்னுடைய உறவினர் இல்லை. அவர் யாரென்றே தெரியாது. கோடிக்கணக்கான மக்கள் முன்னிலையில் பந்துவீச்சாளரது முடிவை பின் வாங்கினால் அது அவரை அவமதிப்பதாகவே அர்த்தம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வார ஓடிடி படங்கள்!

ரூ. 8,757 கோடி சம்பளம்! மெட்டாவை உதறித் தள்ளிய பெண்மணி!

குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உடல்!

பாஜக கூட்டணியில் இருந்து விலகினார் ஓபிஎஸ்! செய்திகள்: சில வரிகளில் 31.7.25 | BJP | OPS | Mkstalin

முதுநிலை பட்டப்படிப்புகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT