படம் | ஐபிஎல்
ஐபிஎல்

எலிமினேட்டர்: மும்பை பேட்டிங்; பிளேயிங் லெவனில் 3 மாற்றங்கள்!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

DIN

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சண்டீகரில் இன்று (மே 30) நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தயாராக ஐபிஎல்லைவிட சிறந்த இடம் கிடையாது: ஜோஸ் ஹேசில்வுட்

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரியான் ரிக்கல்டான் மற்றும் வில் ஜாக்ஸ் இருவரும் தாயம் திரும்பிவிட்டனர். அதனால், அவர்கள் பிளேயிங் லெவனில் இல்லை. பிளேயிங் லெவனில் ஜானி பேர்ஸ்டோ மற்றும் ராஜ் அங்கத் பாவா சேர்க்கப்பட்டுள்ளனர். ரிச்சர்டு கிளீசன் மும்பை அணிக்காக அறிமுகமாகிறார்.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் ஜோஸ் பட்லருக்குப் பதிலாக குசல் மெண்டிஸும், அர்ஷத் கானுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்றையப் போட்டியில் வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் (ஜூன் 1) அகமதாபாதில் நடைபெறும் குவாலிஃபையர் 2 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: கரடியின் பிடியில் இந்திய பங்குச் சந்தை!

ஐபோன் 16இ மாடலுக்கு ரூ. 11,000 ஆஃபர்! எப்படி?

கற்பனை உலகில் வாழும் மோடி அரசும், அதன் ஆதரவாளர்களும்: ஜெய்ராம் ரமேஷ்

தமிழக செய்தித்துறையில் வேலைவாய்ப்பு! ஆக. 18 வரை விண்ணப்பிக்கலாம்!

ஓவல் டெஸ்ட்டிலிருந்து கிறிஸ் வோக்ஸ் விலகல்!

SCROLL FOR NEXT