ஷ்ரேயாஸ் ஐயர் படம்: ஏபி
ஐபிஎல்

சண்டையில்தான் தோற்றிருக்கிறோம், போரில் அல்ல: ஷ்ரேயாஸ் ஐயர்

குவாலிஃபயர் 1-இல் ஆர்சிபியுடனான தோல்விக்குப் பிறகு பஞ்சாப் கேப்டன் பேசியதாவது...

DIN

ஆர்சிபி உடனான குவாலிஃபயர் 1-இல் தோல்விக்குப் பிறகு பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சண்டையில்தான் தோற்றிருக்கிறோம் போரில் அல்ல என தன்னம்பிக்கையுடன் பேசியுள்ளார்.

முல்லான்பூரில் நேற்றிரவு நடைபெற்ற குவாலிஃபயர் 1-இல் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 14.1 ஓவர்களில் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அடுத்து விளையாடிய ஆர்சிபி 10 ஓவர்களில் 106/2 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

தோல்விக்குப் பிறகு பஞ்சாப் கேப்டன் பேசியதாவது:

பந்துவீச்சாளர்களைக் குறைகூற முடியாது

இந்தநாளை மறக்க முடியாது. ஆனால், மீண்டும் டிராயிங் போர்ட்டுக்கு சென்று என்னென்ன தவறுகள் செய்தோம் என்று கவனிக்க வேண்டும். தொடக்கத்தில் அதிகமான விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். இந்தப் போட்டியில் கற்பதற்கு அதிகமாக இருக்கிறது.

உண்மையில், என்னுடைய முடிவுகளுக்காக நான் பெரிதாகக் கவலைப்படவில்லை. களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் திட்டமிட்டவை எல்லாமே சரியாக இருந்தது. அதைச் செயல்படுத்துவதில் தவறிவிட்டோம்.

இந்த மாதிரியான குறைவான இலக்கை கட்டுப்படுத்துவது கடினம். அதனால், பந்துவீச்சாளர்களைக் குறைகூற முடியாது.

சண்டையில்தான் தோற்றிருக்கிறோம், போரில் அல்ல!

குறிப்பாக இந்தமாதிரியான ஆடுகளத்தில் நாங்கள் பேட்டிங்கை முன்னேற்ற வேண்டும். நாங்கள் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் இந்த பிட்ச்சில் மாறுபட்ட பௌன்சர்கள் இருந்தன.

என்ன இருந்தாலும் தொழில்முறை வீரர்களாக நாங்கள் தோல்விக்கு இந்தமாதிரி காரணங்களைக் கூறக்கூடாது. சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடியிருக்க வேண்டும். சண்டையில்தான் தோற்றிருக்கிறோம், போரில் அல்ல எனக் கூறியுள்ளார்.

எலிமினேட்டரில் வெற்றிபெறும் அணியுடன் பஞ்சாப் அணி ஜூன் 1ஆம் தேதி மோதவிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹைதராபாத்தில் ஒரே இரவில் 245 மிமீ மழை! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர்!

குழிதோண்டி புதைக்கற மாதிரி இருக்கு... பாடகர் சத்யன் வேண்டுகோள்!

பஞ்சாபில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்ட ராகுல்: குருத்வாராவில் வழிபாடு!

பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

SCROLL FOR NEXT