நூர் அகமது, பிரசித் கிருஷ்ணா. கோப்புப் படங்கள்.
ஐபிஎல்

ரூ.10 லட்சம் யாருக்கு? சிஎஸ்கே வீரர் நூர் அகமதை முந்திய பிரசித் கிருஷ்ணா!

அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் பிரசித் கிருஷ்ணா முதலிடம் பிடித்தது குறித்து...

DIN

குஜராத் டைட்டன்ஸ் வீரர் பிரசித் கிருஷ்ணா அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் நூர் அகமதை முந்தியுள்ளார்.

ஐபிஎல் 18-ஆவது சீசனில் பிளே ஆஃப்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குவாலிஃப்யர் 1-இல் ஆர்சிபி வெல்ல, எலிமினேட்டரில் மும்பை வென்றது.

எலிமினேட்டரில் மும்பைக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதன்மூலம், அதிக விக்கெட்டுகள் (25) எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறினார்.

15 போட்டிகளில் விளையாடி பிரசித் கிருஷ்ணா 25 விக்கெட்டுகளை எடுக்க, நூர் அகமது 14 போட்டிகளிலேயே 24 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

அடுத்தடுத்த நிலைகளில் ஹேசில்வுட், போல்ட் சமநிலையில் இருக்கிறார்கள்.

குவாலிஃபயர் 2-இல் போல்ட் விளையாடுகிறார், அதில் வென்றால் இறுதிப் போட்டியிலும் விளையாடுவார். அதனால், அதிக விக்கெட்டுகள் எடுக்க ஹேசில்வுட்டை விட அவருக்கே அதிகமான வாய்ப்பிருக்கிறது.

குவாலிஃபயர் 2 போட்டியில் பஞ்சாப்-மும்பை அணிகள் நாளை (ஜூன்.1) அகமதாபாத்தில் நடைபெறவிருக்கிறது. இதில் வெல்லும் அணி இறுதிப் போட்டியில் ஜூன்.3ஆம் தேதி ஆர்சிபியுடன் மோதுகிறது.

இந்த சீசனில் அதிக விக்கெட்டுகள்

1. பிரசித் கிருஷ்ணா - 25 (குஜராத், 15 போட்டிகள்)

2. நூர் அகமது - 24 (சிஎஸ்கே, 14 போட்டிகள்)

3. ஹேசில்வுட் - 21 (ஆர்சிபி, 11 போட்டிகள்)

4. டிரெண்ட் போல்ட் - 21 (மும்பை, 15 போட்டிகள்)

5. சாய் கிஷோர் - 19 (குஜராத், 15 போட்டிகள்)

அதிக விக்கெட்டுகள் எடுப்பவர்களுக்கு பர்ப்பிள் கேப் வழங்கப்படும். சீசன் முடிவில் அதற்காக ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

இந்தப் பரிசுத் தொகையை யார் பெறுவார்கள் என்ற கேள்விக்கு ஜூன்.3ஆம் தேதிதான் பதில் கிடைக்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தஞ்சை உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை!

மூளையைத் தின்னும் அமீபா: கேரளத்தில் மேலும் ஒருவர் பலி!

நயினாருக்கு கூட்டணியைக் கையாளத் தெரியவில்லை! திருந்தமாட்டார் இபிஎஸ்! டிடிவி தினகரன் பேட்டி!

எதிர்பாராதது, ஆனாலும் மகிழ்ச்சியே! பொறுப்பு பறிப்பு பற்றி செங்கோட்டையன்!

பஞ்சாப் முதல்வரை சந்தித்து நலம் விசாரித்தார் மணீஷ் சிசோடியா!

SCROLL FOR NEXT