ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் சாய் சுதர்சனும் இணைந்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் (23 வயது) குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.
ஐபிஎல் போட்டிகள் 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 973 ரன்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
இந்த வரிசையில் 3-ஆவது இந்தியராக 700 ரன்களை கடந்து சாய் சுதர்சன் சாதனை படைத்துள்ளார்.
எலிமினேட்டர் போட்டியில் 80 ரன்கள் குவித்த சாய் சுதர்சன் இதன்மூலம் இந்த சீசனில் 759 ரன்களை எடுத்து முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்கள்
1. விராட் கோலி - 973 (இந்தியா) - ஆர்சிபி
2. ஷுப்மன் கில் - 890 (இந்தியா) - குஜராத்
3. ஜாஸ் பட்லர் - 863 (இங்கிலாந்து) - ராஜஸ்தான்
4. டேவிட் வார்னர் - 848 (ஆஸ்திரேலியா) - ஹைதாராபாத்
5. சாய் சுதர்சன் - 759 (இந்தியா) - குஜராத்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.