பூரன், மார்ஷ் பங்களிப்பில் லக்னௌ 228/5
ஐபிஎல் போட்டியின் 47-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸுக்கு எதிராக லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் சேர்த்தது.
மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில், லக்னௌ அணியில் நிகோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்து ஸ்கோரை உயர்த்த உதவினர். கடைசி கட்டத்தில் எய்டன் மார்க்ரம், ஹிம்மத் சிங் ஆகியோரும் பங்களித்தனர். மும்பை பௌலர்களில் கார்பின் பாஷ் உள்ளிட்டோர் அசத்தினர்.
முன்னதாக டாஸ் வென்ற மும்பை, ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. லக்னௌ இன்னிங்ஸை தொடங்கிய மிட்செல் மார்ஷ் - ஜாஷ் இங்லிஸ் இணை 29 ரன்களுக்கே பிரிந்தது. 3 பவுண்டரிகளுடன் 13 ரன்கள் சேர்த்த இங்லிஸ், கஸôன்ஃபர் வீசிய 3-ஆவது ஓவரில் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
Advertisement
ஒன் டவுனாக வந்த நிகோலஸ் பூரன், மார்ஷுடன் இணைய, அவர்கள் ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்து ஸ்கோரை உயர்த்தியது. அரை சதம் கடந்த பூரன் 21 பந்துகளில் 1 பவுண்டரி, 8 சிக்ஸர்களுடன் 63 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
கார்பின் பாஷ் வீசிய 9-ஆவது ஓவரில் அவர் விளாசிய பந்தை, விக்கெட் கீப்பர் ரயான் ரிக்கெல்டன் கேட்ச் பிடித்தார். அடுத்து கேப்டன் ரிஷப் பந்த் பேட் செய்ய வர, மார்ஷ் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 44 ரன்களுக்கு விடைபெற்றார்.
கார்பின் பாஷ் வீசிய அதே 9-ஆவது ஓவரில் அவர் அடித்த பந்து, நமன் திர் கைகளில் தஞ்சமானது. பின்னர் எய்டன் மார்க்ரம் களம் புக, மறுபுறம் பந்த் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 15 ரன்களுக்கு, வில் ஜாக்ஸ் வீசிய 11-ஆவது ஓவரில், விக்கெட் கீப்பர் ரிக்கெல்டனிடம் கேட்ச் கொடுத்தார்.
அந்த அணியின் கடைசி விக்கெட்டாக, அக்ஷத் ரகுவன்ஷி 1 சிக்ஸருடன் 11 ரன்களுக்கு, ரகு சர்மா வீசிய 13-ஆவது ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்தார். கடைசியாக இணைந்த எய்டன் மார்க்ரம் - ஹிம்மத் சிங் ஜோடியும், ஸ்கோரை உயர்த்த உதவியது.
ஓவர்கள் முடிவில் மார்க்ரம் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 31, ஹிம்மத் சிங் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 40 ரன்களோடு ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பின்னர் மும்பை 229 ரன்களை நோக்கி தனது இன்னிங்ûஸ விளையாடியது.