ஐபிஎல்-2019

2019 ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களும் ஏமாற்றமடைந்தவர்களும்

எழில்

ஐபிஎல் (2019) 12-வது சீசன் போட்டியை முன்னிட்டு முதல் 2 வாரங்களுக்கான அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. மார்ச் 23-ம் தேதி நடைபெறவுள்ள தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ஆடுகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

ஐபிஎல் 2019 சீசனுக்கான வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. ஏலத்தில் மொத்தம் 351 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 228 இந்திய வீரர்கள், 123 வீரர்கள் வெளிநாட்டினர் ஆவர். காலியாக உள்ள 70 இடங்களுக்கு மட்டுமே ஏலம் நடைபெற்றது. இதில் 50 இந்திய வீரர்கள், 20 வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுக்க 8 அணிகள் போட்டி போட்டன.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ள தமிழக வீரர்களும் அவர்களுடைய சம்பளங்களும் 

1. வருண் சக்கரவர்த்தி - பஞ்சாப் - ரூ. 8.40 கோடி

2. ஆர். அஸ்வின் - பஞ்சாப் - ரூ. 7.60 கோடி

3. தினேஷ் கார்த்திக் - கொல்கத்தா - ரூ. 7.40 கோடி

4. விஜய் சங்கர் - ஹைதராபாத் - ரூ. 3.20 கோடி

5. வாஷிங்டன் சுந்தர் - பெங்களூர் - ரூ. 3.20 கோடி

6. முரளி விஜய் - சென்னை - ரூ. 2 கோடி

7. நடராஜன் - ஹைதராபாத் - ரூ. 40 லட்சம் 

8. ஜெகதீசன் - சென்னை - ரூ. 20 லட்சம்

9. எம். அஸ்வின் - ரூ. 20 லட்சம்

2019 ஐபிஎல் ஏலத்தில் இடம்பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களும் அவர்களுடைய அடிப்படைத் தொகைகளும்

1. பாபா இந்திரஜித் - ரூ. 20 லட்சம்
2. பாபா அபரஜித் - ரூ. 20 லட்சம்
3. அனிருதா ஸ்ரீகாந்த் - ரூ. 30 லட்சம்
4. எம். அஸ்வின் முருகன் - ரூ. 20 லட்சம்
5. சி.வி. வருண் சக்கரவர்த்தி - ரூ. 20 லட்சம்
6. சாய் கிஷோர் - ரூ. 20 லட்சம்
7. ஆர். விவேக் - ரூ. 20 லட்சம்
8. ஆர். சஞ்சய் யாதவ் - ரூ. 20 லட்சம்
9. கே. விக்னேஷ்  - ரூ. 30 லட்சம்.

இவர்களில் ஜாக்பாட் அடித்தவர், வருண் சக்கரவர்த்தி. அடிப்படை விலை ரூ. 20 லட்சம் என்றபோதும் இறுதியில் அவரை ரூ. 8.40 கோடிக்குத் தேர்வு செய்தது அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி. அதேபோல முருகன் அஸ்வினையும் அவருடைய அடிப்படை விலைக்கு பஞ்சாப் தேர்வு செய்தது.

மற்றபடி மீதமிருந்த ஏழு தமிழக வீரர்களையும் ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் சீந்தவில்லை. இதனால் பாபா இந்திரஜித், பாபா அபரஜித், அனிருதா ஸ்ரீகாந்த், சாய் கிஷோர், ஆர். விவேக், ஆர். சஞ்சய் யாதவ், கே. விக்னேஷ் ஆகியோருக்கு 2019 ஐபிஎல்-லில் இடமில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT