ஐபிஎல்-2019

ரன் குவிப்புக்கு கடினமான ஆடுகளம்: சென்னை அணிக்கு 148 ரன்கள் இலக்கு

DIN


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. 

ஐபிஎல்-இன் இன்றைய (செவ்வாய்கிழமை) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

அதன்படி டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ருத்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். ப்ருத்வி ஷா சற்று அதிரடி தொடக்கம் அளிக்க தவான் சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ப்ருத்வி ஷா 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்தார். 

அதன்பிறகு தவானுடன் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் இணைந்தார். ரன் குவிப்பதற்கு கடினமான ஆடுகளமாக இருந்ததால் இந்த ஜோடி துரிதமாக ரன் குவிக்க திணறியது. எனினும், ஓவருக்கு 6 ரன்கள் என்ற வகையில் ரன் குவித்து வந்தனர். இந்நிலையில், தாஹிர் பந்தில் ஷ்ரேயாஸ் ஐயர் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ரிஷப் பந்த் களமிறங்கினார். 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் ஆடுகளம் மந்தமாக இருந்தபோதிலும் அதிரடியாக ரன் குவிக்க தொடங்கினார். அவர் 13 பந்துகளுக்கு 25 ரன்கள் எடுத்து பிராவோ பந்தில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து கோலின் இங்க்ரம், கீமோ பால் ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

இதனால், ஷிகர் தவானுக்கு அதிரடியாக ரன் குவிக்க வேண்டிய நெருக்கடி எழுந்தது. ஆனால், அரைசதம் அடித்த தவான் அதிரடியாக ரன் குவிக்க முயன்று 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், அந்த அணி 7 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. 

அதன்பிறகு, அக்ஸர் படேல் மற்றும் ராகுல் தெவாடியா ஓரளவு துரிதமாக ரன் சேர்த்தனர். இதன்மூலம், அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் பிராவோ 3 விக்கெட்டுகளையும், தாஹிர், ஜடேஜா, சாஹர் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT