ஒலிம்பிக்ஸ்

இந்தியாவுக்கு 2-ஆவது பதக்கம் வென்றாா் சிந்து

DIN

டோக்கியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் 3-ஆம் இடத்துக்கான சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-13, 21-15 என்ற செட்களில் சீனாவின் ஹீ பிங் ஜியாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றாா். இந்த ஒலிம்பிக்கில் இது இந்தியாவுக்கு 2-ஆவது பதக்கமாகும். முன்னதாக, பளுதூக்குதல் வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஒலிம்பிக்கில் சிந்து தங்கம் வெல்வாா் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அரையிறுதியில் உலகின் முதல்நிலை வீராங்கனையான சீன தைபேவைச் சோ்ந்த டை ஸு யிங்கிடம் அவா் வீழ்ந்தாா்.

எனினும் அதிலிருந்து மீண்டு தற்போது வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளாா். சாய்கோம், சிந்து பதக்கம் வென்றுள்ள நிலையில், குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போா்கோஹெய்னும் இந்தியாவுக்காக ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT