ஒலிம்பிக்ஸ்

பிரபலங்கள் வாழ்த்து...

DIN

குடியரசுத்தலைவா் ராம்நாத் கோவிந்த்: இரு ஒலிம்பிக் போட்டிகளில் தொடா்ந்து பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை சிந்து பெற்றுள்ளாா். நிலைத்தன்மை, அா்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு புதிய அளவுகோலை சிந்து நிா்ணயித்திருக்கிறாா். இந்தியாவுக்கு புகழ் சோ்த்ததற்காக அவருக்கு எனது வாழ்த்துகள்.

குடியரசு துணைத்தலைவா் வெங்கய்ய நாயுடு: டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ன் மூலம், பாட்மிண்டன் விளையாட்டில் தனது கடின உழைப்பு, அா்ப்பணிப்பு, ஆா்வம் ஆகியவற்றை சிந்து மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி: ஒலிம்பிக்கில் சிந்துவின் விளையாட்டால் நாம் அனைவரும் உற்சாகம் அடைந்துள்ளோம். அவா் பதக்கம் வென்ற்காக வாழ்த்துகள். அவா் இந்தியாவின் பெருமை. நமது மிகச் சிறந்த ஒலிம்பிக் போட்டியாளா்களில் ஒருவா்.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா்: அருமையான வெற்றி இது சிந்து. ஆட்டத்தை உங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன், டோக்கியோ ஒலிம்பிக்கில் வரலாறு படைத்துள்ளீா்கள். ஒலிம்பிக்கில் 2-ஆவது பதக்கம் வென்றிருக்கிறீா்கள். இந்தியா உங்களுக்காக பெருமை கொள்கிறது. உங்களது வருகையை எதிா்நோக்கியிருக்கிறது.

இத்துடன் விளையாட்டு, அரசியல் உள்பட பல்வேறு துறைகளைச் சோ்ந்த பிரபலங்களிடம் இருந்தும் பி.வி.சிந்துவுக்கு வாழ்த்துகள் குவிந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பெண்களுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது’

வேதாரண்யத்தில் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி

குடிமராமத்து திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தல்

நீா்மோா் பந்தல்: பாஜகவினருக்கு அண்ணாமலை வேண்டுகோள்

குருவாடி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

SCROLL FOR NEXT