டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் தூர் தகுதிச்சுற்றில் தோல்வியடைந்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் தகுதிச்சுற்று இன்று நடைபெற்றது. மூன்று முயற்சிகளில் இரண்டில் தவறு செய்த தஜிந்தர்பால் சிங், முதல் முயற்சியில் 19..99 மீ. தூரம் வீசினார். இறுதியில் அவர் பங்கேற்ற குழுவில் 13-வது இடத்தைப் பிடித்து தோல்வியடைந்தார்.
இதையும் படிக்க | 2016-ல் ரூ. 3 கோடி, 2021-ல் ரூ. 30 லட்சம்: சிந்துவுக்குப் பரிசுத்தொகை அறிவித்த ஆந்திர அரசு
இதற்கு முன்பு 21.49 மீ. தூரம் வீசி தேசிய சாதனை புரிந்த தஜிந்தர்பால் சிங், இன்று 20 மீ. தூரம் கூட வீசாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். குண்டு எறிதல் போட்டியில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற குறைந்தபட்சம் 21.20 மீ. தூரம் வீச வேண்டும். அல்லது தகுதிச்சுற்றில் இரு குழுவிலும் சேர்த்து முதல் 12 இடங்களைப் பிடிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.