ஒலிம்பிக்ஸ்

வெண்கலம் வென்ற இந்தியா: பஞ்சாப் ஹாக்கி வீரர்களுக்குத் தலா ரூ. 1 கோடி பரிசுத்தொகை

DIN

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதற்காக இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பஞ்சாப் வீரர்களுக்குத் தலா ரூ. 1 கோடி வழங்கப்படும் என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி அரையிறுதியில் இந்திய ஆடவா் அணி பெல்ஜியத்திடம் 2-5 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. இதையடுத்து வெண்கலத்துக்கான போட்டியில் ஜெர்மனியுடன் இன்று மோதிய இந்தியா சிறப்பாக விளையாடி 5-4 என ஆட்டத்தையும் வெண்கலப் பதக்கத்தையும் வென்றது. இதையடுத்து 41 வருடங்களுக்கு இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு ஒலிம்பிக் பதக்கம் கிடைத்துள்ளது. 

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்தியா ஹாக்கி அணியில் கேப்டன் மன்ப்ரீத் சிங், துணை கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங், வருண் குமார், ருபிந்தர் பால் சிங், ஹார்திக் சிங், தில்ப்ரீத் சிங், குஜ்ரந்த் சிங், மன்தீப் சிங், ஷம்ஷெர் சிங், சிம்ரன்ஜீத் சிங் என 10 பஞ்சாப் வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். . மேலும் மாற்று கோல் கீப்பரான கிரிஷன் பதக்கும் பஞ்சாப்பைச் சேர்ந்தவர். 

இந்நிலையில் இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்ற பஞ்சாப் வீரர்களுக்குத் தலா ரூ. 1 கோடி வழங்குவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப் விளையாட்டுத்துறை  அமைச்சர் ராணா குர்மித் சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT